நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்….அதிரடியாக குறைந்த தங்கம் விலை! – Kumudam

Spread the love

கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு சிறிய அளவில் ஆறுதல் கிடைத்துள்ளது.

கடந்த 14-ந்தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் “ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும்” விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று ( 24.08.2026)  ஒரு கிராம் தங்கம் “ரூ.15,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,240-க்கும்” விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் “ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும்” விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் சரிவு:

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி “ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு” விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய சரிவு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோரிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *