International
oi-Mani Singh S
நிகோசியா: சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிரேனியாவில் இருந்து துருக்கி டவுகு (Taucu) நோக்கி சொகுசு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. 267 பேருடன் சென்ற அந்த படகு புறப்பட்ட சிறிது நேரத்தில் மூழ்க தொடங்கியுள்ளது. கரையிலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் இருந்தபோது தண்ணீருக்குள் மூழ்கத் தொடங்கியதாக துருக்கி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சவாலான காலநிலையால் கப்பல் கவிழ்ந்துள்ளது என்றும், 237 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர். 23 பேரை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசின் பிரதமர் உனால் உஸ்தெல் இச்சம்பவம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

267 பயணிகளுடன் சென்ற கப்பல் மூழ்கியது
கப்பல் மூழ்க தொடங்கியதால் அதில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு உயிரை காப்பாற்ற லைஃப் ஜாக்கெட்டுடன் கடலில் குதித்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற மீட்புப பணியாளர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட பயணிகளுடன் துறைமுகம் நோக்கி மீட்பு குழுவினர் வருவதும் பின்னணியில் ஆம்புலன்ஸ் சைரன்கள் ஒலிக்கும் காட்சிகளும் பதைபதைக்க வைப்பதாக அமைந்துள்ளன.
அதேபோல, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள லைஃப் ஜாக்கெடுகளுடன் மீட்பு படகில் ஏறும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சிலர் மீட்கப்படுவதும், சிலர் லைஃப் ஜாக்கெட்டுகளுடன் தண்ணீரில் தத்தளிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. வடக்கு சைப்ரஸ் துருக்கிய குடியரசின் பிரதமர் உனால் உஸ்தெல் இச்சம்பவம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
7 பேர் உயிரிழப்பு
அவர் கூறுகையில், “237 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர். 23 பேரை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சவாலான காலநிலையால் கப்பல் கவிழ்ந்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை” என்றார். இந்த படகு விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கடலோர காவல் படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், பொதுமக்களின் படகுகள் இணைந்து மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. கைரெனியா துறைமுகத்தில் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
துருக்கி மட்டுமே அங்கீகரித்த தனி நாடு
1974 ஆம் ஆண்டு முதல் சைப்ரஸ் நாடு இரண்டாக பிரிந்துள்ளது. கிரீஸ் ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு சைப்ரஸ் நாட்டில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. சைப்ரஸ் நாட்டின் தெற்கு பகுதியை சைப்ரஸ் குடியரசாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளன. வடக்கு பகுதி ‘துருக்கிய குடியரசு’ எனத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும் இதனை துருக்கி மட்டுமே தற்போது வரை அங்கீகரித்துள்ளது.

