“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி… பதிலடி கொடுத்த வஹிதா அக்தர்.. ஆடியோ லீக்! – Kumudam

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகப் பரபரப்பு நிலவி வருகிறது. சமூக வலைதளப் பிரபலமான வஹிதா அக்தர், முத்துக்குமரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இருவரும் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வீடியோக்களால் தொடங்கிய சர்ச்சை!

முத்துக்குமரனுடனான தனது சந்திப்பு, அவருடன் ஏற்பட்ட நெருக்கம் மற்றும் உறவு தொடர்பாக வஹிதா அக்தர் சில வீடியோக்களில் பேசியிருந்தார். இதற்கிடையே, முத்துக்குமரன் வஹிதாவிடம், “இந்த மூஞ்ச எனக்குப் பிடிச்சிருக்கு. பார்ட் டைம் பாய் ஃபிரெண்டாக இருக்க அப்ளிகேஷன் போட்டுள்ளேன். என்னைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறுவதுபோன்ற வீடியோவும் வெளியாகி கவனம் பெற்றது.

இந்தச் சூழலில், தற்போது வெளியாகியுள்ள ஆடியோவில் இருவரும் தங்களுக்கிடையேயான உறவு மற்றும் அதற்கு என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து விவாதிப்பதுபோன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது.

“இதுக்கு என்ன முடிவு சொல்லு…” – முத்துக்குமரன்

ஆடியோவில், “இதுக்கு என்ன முடிவு சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகக் கேட்கிறது. அதற்கு வஹிதா அக்தர், “நான் உங்களைக் கைது பண்ணிட்டாங்களான்னு கேட்கத்தான் கால் பண்ணேன். வெறும் ஃபிரெண்ட்ஷிப் தான் பெட் வரைக்கும் போகுமா? False hope கொடுத்திருக்கீங்க” என்று கூறுவதாக இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, “இதுக்கு என்ன closure, அதச் சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும், “மார்ச்சில் இருந்து பேசுறோம். நான் எப்பயாவது தப்பா நடந்திருக்கேனா? நான் எப்பயாவது misbehave பண்ணிருக்கேனா?” என்று அவர் கேள்வி எழுப்புவதாகவும் ஆடியோவில் உள்ளது.

“ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” – வஹிதா கேள்வி!

தொடர்ந்து, “ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” என்று வஹிதா கேட்பதாகக் கேட்கிறது. அதற்கு முத்துக்குமரன், “நீ அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போடுறதுக்காகவா எடுத்த?” என்று கேட்பதாகவும், “நீ பார்ட் டைம் பாய் ஃபிரெண்டா இருக்கச் சொல்லி சீரியஸாகக் கேட்டியா?” என்று வினவுவதாகவும் உரையாடலில் இடம்பெற்றுள்ளது.

மேலும், “நீ விளையாட்டுக்குக் கேட்டுட்டு இதோட விட்டுடலாம்… நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும், அதற்கிடையே வஹிதா மீண்டும், “ஃபிரண்ட் கூடதான் படுப்பீங்களா?” என்று கேள்வி எழுப்புவதாகவும் ஆடியோவில் கேட்கிறது.

மீண்டும் சூடுபிடிக்கும் சர்ச்சை!

ஏற்கெனவே முத்துக்குமரன் குறித்து வஹிதா அக்தர் வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோவும் இருவருக்கும் இடையே என்ன நடந்தது, அவர்களது உறவு குறித்த புரிதல் என்னவாக இருந்தது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *