நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்.. 6.4 ரிக்டரில் அதிர்ந்த கட்டிடங்கள்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு | New Zealand Earthquake: 6.3 Magnitude Tremors Felt Across South Island, tsunami warning issued

Spread the love

International

oi-Vigneshkumar

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் இப்போது 6.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு உள்ள டி அனாவ் நகரம் அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அரண்டு போய் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பொதுவாக நிலநடுக்கம் என்பது எப்போது எங்கு ஏற்படும் என்றே தெரியாது. தீவிரமான நிலநடுக்கம் ஏற்படும்போது வெறும் ஒரு சில நிமிடங்களில் அது பேரழிவை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட அப்படி தான் வெனிசுவேலா நாட்டில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு, பேரழிவை ஏற்படுத்தியிருந்தது.

New Zealand Earthquake

இந்தச் சூழலில் தான் நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டி அனாவ் நகரம் அருகே இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி டி அனாவ் நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடக்கே அமைந்திருந்ததாக நியூசிலாந்து தேசிய எமர்ஜென்சி சென்டர் தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த டி அனாவ் நகரம் தான் உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஃபியோர்ட்லாந்து பகுதிக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். திடீர் நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், அச்சத்தில் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நியூசிலாந்து எமர்ஜென்சி சென்டர் 6.4 ரிக்டர் என சொன்னாலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆய்வு மையங்கள் 5.9 ரிக்டர் அளவிலேயே நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து நாடானது பசிபிக் பகுதியில் அமைந்துள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” (Ring of Fire) எனப்படும் அதிக நிலநடுக்கம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் காணப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும், 6 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் கவலையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *