நீதிபதிகள் நியமனம்: “ஒரு சமூகத்திற்கு மட்டுமே சாதகமாக” – முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்| Appointment of judges: “Favorable to only one community” – Former Chief Justice B.R. Gavai

Spread the love

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் பன்முகத்தன்மை தகுதி ஆகியவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில்,

“அண்மைய கொலீஜியம் பரிந்துரைகள் விளிம்புநிலை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளி, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்துத் தரப்பினரும் இணைந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, குடியரசுத் தலைவர் இதில் தலையிட வேண்டும்.

முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள ஒரு சமூகம், அண்மைக் காலங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளது. கொலீஜியம் அமைப்பில் நான் அங்கம் வகித்த காலத்தில், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கும்போது பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் முன்னேறிய வகுப்பினர் என அனைத்துத் தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை உறுதி செய்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *