இந்த அறையில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தண்ணீரை விட முக்கியமான வேறு எந்த வளமும் இல்லை. நமது நதிகள் அரசியல் எல்லைகளை அறிவதில்லை. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு மற்றும் பாலாறு ஆகியவை தென்னக தீபகற்பத்தின் வாழ்வாதாரங்களாகும். நீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது.
நதிநீர் பங்கீடு என்பதில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் நகர வேண்டிய நேரம் இது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கின்றன. நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.

ஒவ்வொரு நதிக்கரை மாநிலத்திற்கும் நியாயமான தேவைகள் உள்ளன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நமது நிலைப்பாடு மூன்று கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. சமத்துவம், வெளிப்படைத்தன்மை, கூட்டுறவு. ஆனால் கூட்டுறவு என்பது இருவழியிலும் இருக்க வேண்டும். கர்நாடகா எப்போதும் தனது அண்டை மாநிலங்களின் உரிமைகளை மதித்து வருகிறது.
கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் நமது நதிகள் இணைப்பு குறித்த கர்நாடகாவின் குறிப்பிட்ட நிலைப்பாட்டைத் தொடரும் விவாதத்தின் போது இந்த மண்டலக் குழுவின் முன் வைப்பேன்.
தெற்கு வலுவாக இருக்கும்போது, இந்தியா மேலும் வலுவடைகிறது. எங்களோடு சேர்ந்து நடங்கள், எங்களுக்கு நியாயமான முறையில் நிதியளியுங்கள், தெற்கிற்கான உரிமையை வழங்குங்கள். நாங்கள் இந்தியாவிற்குப் பிரகாசமான எதிர்காலத்தைத் தொடர்ந்து வழங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் கர்நாடகா!” என்று பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் கர்நாடக முதல்வர் மேகதாது அணை குறித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.