நெருங்கிய உறவுக்குள் திருமணம்: `மத்திய அரசு பரிசீலிக்கலாம்’ – உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? | Supreme Court’s Key Observation on Marriage Within Relatives

Spread the love

ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் சில மறைந்துள்ள மரபணு குறைபாடுகள், பெற்றோர் இருவரிடமும் இருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

அதே நேரத்தில், இந்தியாவில் சில சமூகங்களில் உறவினர் திருமணங்கள் பல தலைமுறைகளாக கலாசார நடைமுறையாக இருந்து வருகின்றன. குடும்ப உறவுகளை பாதுகாப்பது, பாரம்பரிய பழக்கங்கள் போன்ற காரணங்களால் இந்த நடைமுறைகள் தொடர்கின்றன.

உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றம்!

இந்த நிலையில், திருமண உரிமை, சமூக மரபுகள் மற்றும் குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உறவுக்குள் திருமணம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது.

தற்போது, இதுபோன்ற திருமணங்களுக்கு நாடு முழுவதும் பொதுவான தடை எதுவும் இல்லை. மத்திய அரசு இதுகுறித்து எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *