Kaif Slams Team Management Over Siraj Exclusion: “They Would Have Questioned Sachin Too” | ‘சச்சினையே கேள்வி கேட்டிருப்பார்கள்!’ – சிராஜ் நீக்கத்தால் கொந்தளித்த கைஃப், கவாஸ்கர், ரவி சாஸ்திரி

Spread the love

சமீபத்திய ஃபார்ம்தான் காரணமா?

சிராஜின் சமீபத்திய ஃபார்ம் குறித்தும் கைஃப் பேசினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் சிராஜ் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “அவர்களின் நினைவாற்றல் மிகவும் குறுகியது. இலங்கையில் அவர் இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவரது வேகமும் குறைவாக இருந்தது. ஆனால் ஆசியக் கண்டத்தில், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாதான் விக்கெட் வீழ்த்தும் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருந்தனர். கொழும்பில் நடந்த போட்டியில் கூட ஜடேஜாவும், மனவ் சுதரும்தான் பெரும்பாலான ஓவர்களை வீசினர்,” என சிராஜுக்கு ஆதரவாகப் பேசினார்.

முகமது சிராஜ்

முகமது சிராஜ்

கவாஸ்கர், ரவி சாஸ்திரியும் அதிருப்தி!

முகமது கைஃப் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரியும் சிராஜ் நீக்கப்பட்டது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அனுபவ வீரரான சிராஜை அணி நிர்வாகம் கருத்தில் எடுத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “வேகம், திறன் மற்றும் சீம் மூவ்மென்ட் தான் தேர்வுக்கு அடிப்படையாக இருந்தால், முகமது சிராஜ் எங்கே? அனுபவம், ஆக்ரோஷம் மற்றும் பந்துவீச்சில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் ஆகியவற்றுக்கு மதிப்பு இல்லையா? நிச்சயம் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்!” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்துப் பேசிய சுனில் கவாஸ்கர், “இது ஆச்சரியமல்ல, திகைப்பூட்டுகிறது. ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் அவரை ஆட வைத்தபோதே, முதல் டெஸ்ட் போட்டிக்கு அவரைத் தயார்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவரை பிளேயிங் லெவனில் பார்க்காதது அதிர்ச்சியளிக்கிறது. சிராஜ் இந்திய அணியை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. அவரது பந்துவீச்சில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *