நொய்டா: நூடுல்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகள், பெற்றோர் இறந்ததில் திருப்பம்; சொத்து பிரச்னையில் தற்கொலையா?

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வந்த மகேஷ் என்பவரும், அவரது மனைவி லலிதா மற்றும் மூன்று குழந்தைகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு படுத்தனர். காலையில் அவர்கள் இறந்து போனார்கள். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். நூடுல்ஸ் சாப்பிட்டு எப்படி இறக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து வீட்டில் இருந்த உணவு மாதிரிகளை எடுத்துச்சென்றனர். போலீஸாரின் விசாரணையில் 5 பேரும் உள்ளூர் கண்காட்சிக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.

இரவு உணவில் நூடுல்ஸை உட்கொண்டதாகக் கூறப்பட்டதால் இந்த வழக்கு முதலில் உணவு நச்சுத்தன்மையாக மாறி இருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் மகேஷ் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு ஆடியோ பதிவு கிடைத்து இருக்கிறது. மொபைல் போனில் கிடைந்த அந்த ஆடியோவில், அவர்களின் மரணத்திற்கு மகேஷின் இரண்டு சகோதரிகளும், ஒரு மைத்துனரும்தான் காரணம் என்று தெரிய வந்தது.

அவர்கள் மகேஷிடம் குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை செய்து வந்துள்ளனர். இதில் மைத்துனர் நீரஜ் அதிக அளவில் பிரச்னை ஏற்படுத்தியதாக தெரிகிறது. போலீஸார் நீரஜை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர். மகேஷ் சகோதரி ஒருவரின் கணவர் இறந்த பிறகு வீட்டை விட்டு விரட்டிவிட்டதாகவும், அவருக்கு மகேஷ் வாக்குறுதி கொடுத்து ஒரே வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சாப்பாடு நச்சுத்தன்மையாகி போயிருக்க வாய்ப்பு இல்லை என்றும், சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சாப்பாடு நச்சுத்தன்மையுடன் மாறி இருந்தால் வாந்தி, பேதி போன்ற பிரச்னை இருந்திருக்க வேண்டும். ஆனால் 5 பேருக்கும் அந்த பிரச்னை ஏற்படவில்லை என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *