அக்டோபர் 31 – ம் தேதி அதிசாரமாக கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் குருபகவான். 25.1.2027 அன்று மீண்டும் கடகத்துக்கு வருகிறார். இந்த அதிசார குருப் பெயர்ச்சியில் குரு பார்வையால் 12 ராசிகளுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன… விளக்குகிறார் ஜோதிடஶ்ரீ சக்திதரன்!

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் 9, 12 ம் வீட்டுக்கான அதிபதி. அக்டோபர் 31 அன்று அவர் அதிசாரமாகி உங்களின் பூர்வபுண்னிய ஸ்தானாதிபதியாகிய சூரியனின் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இனி தடைகள் விலகும். பலமுறை முயன்றும் முடிக்க முடியாத விஷயங்களைக் கூட மிக எளிதாக சாதித்துக் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும்.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அந்த வகையில் உங்கள் ராசிக்கும் 9, 11-ம் இடங்களுக்கும் குருவின் பார்வை கிடைக்கிறது. இதனால் நம்பிக்கை அதிகரிக்கும். ராசிக்கு குருபார்வை கிடைப்ப தால் எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும். எதிரிகள் வீழ்வார்கள். ஏழரை சனியினால் உண்டான ஆரோக்கியக் குறைபாடுகள் சரியாகும். உற்சாகமாகப் பணி செய்வீர்கள்.
தந்தை வழியில் செல்வம் செல்வாக்கு கூடும். சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் விலகும். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இனி முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். இதுவரை நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த தொழில் லாபத்தைத் தொடும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.
ரிஷபம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10 மற்றும் 12-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்து, வாரிசு தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை உருவாகும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பணம் அல்லது சொத்து தொடர்பான பிரச்னைகளில் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மறைமுகமாகக் கிடைக்க வேண்டிய நன்மைகள் தேடி வரும். ஆராய்ச்சி, மருத்துவம், காப்பீடு, வரி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
குருவின் பார்வை உங்கள் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் விழுவதால் தொழில், உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதுவரை உங்களுடைய உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் இருந்திருந்தால் இனி அது கிடைக்கும். பதவி உயர்வு, பொறுப்புகள் அதிகரிப்பு, புதிய வாய்ப்புகள் போன்றவை தேடி வரும். தொழிலில் இருந்த மந்தநிலை விலகி வளர்ச்சி ஏற்படும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் உருவாகும். குருவின் பார்வை 12-ம் வீட்டில் விழுவதால், வெளிநாட்டில் வேலை, தொழில் அல்லது கல்வி தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். அதே நேரத்தில் சுபமான செலவுகளும் அதிகரிக்கும்.
மிதுனம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9 மற்றும் 11-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். கணவன், மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக புதிய தொடர்புகள் உருவாகும்.
குருவின் பார்வை பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் விழுவதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். தந்தையால் நன்மையும் ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாள்களாக நிறைவேறாமல் இருந்த வேண்டுதல்கள் நிறைவேறும் சூழல் உருவாகும். தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். லாபஸ்தானமான 11-ம் வீட்டை குரு பார்ப்பதால் வருமானம் அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்து இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8 மற்றும் 10-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன், நோய், எதிரிகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய தொழில் முயற்சிகளும் வருமானத்தைப் பெருக்கும் வழிகளும் உருவாகும். உத்தியோகத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்கள் திறமையால் முன்னேறுவீர்கள். அதேநேரத்தில் உடல்நலத்தில் அலட்சியம் காட்டாமல், தேவையான ஓய்வையும் கவனத்தையும் அளிப்பது நல்லது.
எட்டாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் எதிர்பாராத வகையில் சில நன்மைகள் கிடைக்கும் பூர்வீகச் சொத்து, காப்பீடு, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் விலகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. குருவின் பார்வை உங்கள் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டில் விழுவதால் தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்; நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள், வேலை மாற்றம் போன்ற முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படலாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7 மற்றும் 9-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. பூர்வபுண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்கும் கல்வி, போட்டித் தேர்வுகள், உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் ஈடுபடுபவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
குருவின் பார்வை 7-ம் வீட்டில் விழுவதால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர் களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். லாபம் அதிகரிக்கும். பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்னைகள் விலகும். தந்தையால் ஆதரவும் நன்மையும் கிடைக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கும் உயர்கல்வி முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கும் பெரியோர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். பணியில் அதிரடி மாற்றம், புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
கன்னி: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 6 மற்றும் 8-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. சுக ஸ்தானமான 4-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் வீடு, மனை, வாகனம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக மனதில் இருந்த கவலைகள் குறைந்து நிம்மதி கிடைக்கும்.
ஆறாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் கடன், நோய், எதிரிகள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் இருந்த போட்டிகள் குறையும். வழக்குகள் அல்லது நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் பிரச்னைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படலாம். உத்தியோகத் தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எட்டாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் எதிர்பாராத வகையில் சில நன்மைகள் கிடைக்கும் பூர்வீகச் சொத்து, வாரிசு உரிமை போன்ற விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது.
துலாம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5 மற்றும் 7-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. முயற்சி ஸ்தானமான 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும்.
ஐந்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் பிள்ளை களின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெறுவார்கள். கலை, படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் ஏழாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமண முயற்சிகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தங் கள் மற்றும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். இருப்பினும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
விருச்சிகம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4 மற்றும் 6-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. தன ஸ்தானமான 2-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் பணவரவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். சேமிப்பு மற்றும் சொத்து சேர்க்கை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சூழல் அமையும்.
நான்காம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வீடு, மனை, வாகனம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். சொந்த வீடு வாங்கும் முயற்சிகள் தொடங்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சொத்து தொடர்பான ஆவணங்களைச் சரிபார்த்து முடிவெடுப்பது நல்லது. ஆறாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் கடன், நோய், எதிரிகள் தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் பணியிடத்தில் இருந்துவந்த போட்டிகளைத் திறமையுடன் எதிர்கொள்வீர்கள்.

தனுசு: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 1, 3 மற்றும் 5-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் ராசியையே குரு பார்ப்பதால் உடல் மற்றும் மன உறுதி அதிகரிக்கும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மூன்றாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் தைரியமும் முயற்சியும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் எழுத்து, பேச்சு, தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படலாம். ஐந்தாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். திருமணமான தம்பதியருக்குப் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும் முதலீடுகள் தொடர்பான முடிவுகளில் நிதானம் தேவை.
மகரம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 12, 2 மற்றும் 4-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. விரய ஸ்தானமான 12-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் வெளிநாட்டுத் தொடர்புகள், பயணங்கள் மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சில அனுகூலங்கள் கிடைக்கும் இதுவரை தூக்கம் இல்லாமல் தவித்த உங்களுக்கு இப்போது தூக்கம் நல்ல முறையில் வரும். வீண் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
இரண்டாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் குடும்ப உறவுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைய வாய்ப்புள்ளது. பணவரவு மற்றும் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். நான்காம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வீடு, மனை, வாகனம் தொடர்பான விஷயங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்படலாம். பழைய வண்டியைக் கொடுத்துவிட்டுப் புதிய வண்டி வாங்குவீர்கள். தாயாரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கல்வி தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான மாற்றங்கள் உருவாகும் சொத்து வாங்குவது விற்பது போன்ற முடிவுகளை எடுக்கும்போது ஆவணங்களைச் சரிபார்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.
கும்பம்: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 11, 1 மற்றும் 3-ம் இடங்களுக்குக் கிடைக்கிறது. லாப ஸ்தானமான 11-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு கிடைக்கும் தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
உங்கள் ராசியின் மீது குருவின் பார்வை விழுவதால் தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகரிக்கும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் தெளிவு கிடைக்கும். மூன்றாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் தைரியமும் முயற்சியும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் குறையலாம். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். எழுத்து, பேச்சு மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்களைப் பெறலாம்.
மீனம்: சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு தனது 5-ம் பார்வையாக உங்கள் தொழில் ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கிறார். இதனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது பணியிட மாற்றம் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. தொழில் செய்பவர்கள் தங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து திட்டமிடலாம். எனினும், புதிய பொறுப்புகளை ஏற்கும்போது உரிய திட்டமிடலும் அவசியம்.
குருபகவானின் 7-ம் பார்வை விரய ஸ்தானமான 12-ம் வீட்டின் மீது விழுகிறது. இதனால் வெளியூர், வெளிநாட்டு வேலை தொடர் பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். வரவு செலவுகளைத் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
குருபகவானின் 9-ம் பார்வை தன ஸ்தானமான 2-ம் வீட்டின் மீது விழுகிறது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். பேச்சின் மூலம் சாதிக்க வேண்டிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாகும். சேமிப்பை அதிகரிக்கவும் நீண்ட கால நிதித் திட்டங்களை வகுக்கவும் ஏற்ற தருணமாக அமையலாம்.