பசங்க கல்யாணத்தை பார்க்காம போயிட்டது கஷ்டமா இருக்கு!-மறைந்த‌ நடிகை தமிழ்செல்வியின் கணவர் பிரேம்நாத்

Spread the love

கணவருடன் தமிழ்ச்செல்வி

கணவருடன் தமிழ்ச்செல்வி

சிகிச்சைக்குப் பிறகு வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பி எல்லா வேலைகளையும் பார்த்திட்டிருந்தாங்க. எங்க சொந்த ஊரான சிவகங்கைக்கு காரை அவங்களே ஓட்டிட்டுப் போவாங்க.

எந்தப் பிரச்னையும் இல்லாத சூழல்லதான் அன்னைக்கு திடீர்னு கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாங்க. ஏற்கனவே சிகிச்சை எடுத்தவங்கங்கிற காரணத்தால் உடனே மருத்துவமனைக்குப் போயிட்டோம். அங்க ஒருநாள் அட்மிட் ஆகி பார்த்துட்டுப் போயிடலாம்னு அட்மிட் ஆனோம்.

நார்மல் வார்டுதான். பேசிட்டே இருந்தவங்க கொஞ்ச நேரத்துல ‘கொஞ்ச நேரம் படுத்துகிடுறேன்’னு சொல்லி படுத்தவங்கதான், பிறகு எழுந்திருக்கவே இல்லை. தூக்கத்துலயே உயிர் போயிருக்கு.

மருத்துவர்கள் வந்து பார்த்துட்டு ‘மைல்டு அட்டாக்’னு சொன்னாங்க.

நோயுடன் போராடிக் கொண்டிருந்த காலத்தையெல்லாம் கடந்துட்டோம்னு நினைச்சு நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்துல தன் மூச்சை நிறுத்திக்கிட்டாங்க.

பசங்களை நல்லவிதமா வளர்த்து ஆளாக்கினவங்க அவங்க கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம். இது ஒண்ணுதான் எனக்கு பெரிய வலியா இருக்கு” என்று கலங்கினார் பிரேம்நாத்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *