பனிச்சரிவா? நிலநடுக்கமா? நேபாளத்தை உருக்குலைத்த வெள்ளத்திற்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம் | Avalanche or earthquake? What caused the devastating floods in Nepal? Nepal’s Meteorological Department explains

Spread the love

International

oi-Mani Singh S

காத்மாண்டு: நேபாளத்தில் ஹாலிவுட் சினிமா காட்சிகளை மிஞ்சும் விதமாக இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திடீர் வெள்ளத்திற்கு என்ன காரணம் என்ன என்று நேபாள வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பே காரணம். இந்திய எல்லைப் பகுதி கிராமங்களுக்கும் நேரடி ஆபத்து உருவாக வாய்ப்பு உள்ளது. கண்டக் கரையோர மக்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலையின் மடியில் அமைந்து இருக்க கூடிய அழகிய இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளத்தில் அவ்வப்போது இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதை பார்க்க முடியும். இந்நிலையில் தான் இன்று திடீரென்று திபெத் பகுதியில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து நேபாளத்தை நோக்கி வந்தது.

earthquake

நேபாளத்தில் உள்ள நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓடும் போட்டி கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரும்பு பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் சில கிராமங்களை மொத்தமாக வெள்ளம் அடித்து சென்றுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலங்கள், கட்டிடங்கள் இருந்த இடமெ தெரியாமல் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளன.

ஹாலிவுட் சினிமா காட்சிகளை மிஞ்சும் விதமாக இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திடீர் வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பது பற்றி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் நேபாள வானிலை ஆய்வு மையம் பனிப்பாறை உடைப்பே வெள்ளத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேபாள வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

நேபாள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பே காரணம். கண்டக் கரையோர மக்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாராயணி, கண்டக் கரையோர மக்கள், தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்திய எல்லைப் பகுதி கிராமங்களுக்கும் நேரடி ஆபத்து உருவாக வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளான, நுவாகோட், தாடிங்க், ரசுவா உள்பட 5 மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மழை அதிகரிக்கும் பட்சத்தில் மக்கள் அப்பகுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. நேபாளத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *