"பல்லாவரத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" – தவெக வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் உறுதி

Spread the love

பல்லாவரம் அரசியல் களம் இந்த முறை சற்றே வித்தியாசமாகக் காட்சி தருகிறது. காரணம், புதிய முகம், ஆனால் பழைய சமூகப் பணியின் அடையாளம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் காமாட்சி ஜெயகிருஷ்ணன், வாக்குச் சேகரிப்பை வழக்கமான அரசியல் முறையில் இல்லாமல், நம்ம வீட்டுப் பெண் என்ற பாணியில் முன்னெடுத்து வருகிறார்.

காமாட்சி ஜெயகிருஷ்ணன்
காமாட்சி ஜெயகிருஷ்ணன்

சென்னையைச் சேர்ந்த காமாட்சி ஜெயகிருஷ்ணன், கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக இயங்கும் தொழிலதிபர். ஆனால், அவரைத் தனித்துவப்படுத்துவது தொழில் அல்ல, சமூக அக்கறை. சிறுவயதிலிருந்தே உதவி மனப்பான்மை கொண்ட இவர், குறிப்பாக கல்வி உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

“ஒரு மாணவன் முன்னேறினால், ஒரு குடும்பமே உயர்கிறது” என்ற நம்பிக்கையைச் செயல்படுத்தியவர். விழுப்புரம் மாவட்டத்தில், காமாட்சி மற்றும் அவரது கணவர் ஜெயகிருஷ்ணனால் கல்விச்சேவை பெற்ற குடும்பங்கள் நம்பிக்கையிலும், பொருளாதாரத்திலும் மேலெழுந்து நிற்கின்றன.

அரசியல் நல்லவர்களுக்கானது இல்லை, வல்லவர்களுக்கானது என்று சொல்வார்கள். ஆனால், அதையே சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிறார் காமாட்சி. “மக்கள் வாய்ப்பு கொடுத்தால், நல்லவர்களும் வல்லவர்களாக மாற முடியும்” என்ற நம்பிக்கையோடுதான் அரசியல் களத்தில் கால் பதித்திருக்கிறார் காமாட்சி ஜெயகிருஷ்ணன்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் களத்தில் நேரடியாகப் போட்டியிடாதது, தற்போது களத்தில் வீசிக் கொண்டிருக்கும் விஜய் அலை, காமாட்சியின் கல்விச் சேவை, கட்சி நிர்வாகிகளின் தன்னலமற்ற களப்பணி எனப் பல்வேறு காரணிகள் பல்லாவரம் த.வெ.க வேட்பாளருக்குச் சாதகமான சூழலாக மாறியுள்ளது.

காமாட்சி ஜெயகிருஷ்ணன்
காமாட்சி ஜெயகிருஷ்ணன்

தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என வேட்பாளர் காமாட்சியும், கட்சி நிர்வாகிகளும் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது களத்தில் நேர்மறை எண்ணங்களை விதைக்கிறது. தொகுதி மக்களிடையே களத்தில் உரையாடும் காமாட்சி, தொகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவேன், கல்வியில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன், தளபதியின் ஆசியுடன் பல்லாவரத்தை முன்மாதிரி தொகுதியாக ஏற்றம் காண்பதற்கு உழைப்பேன் என வாக்குறுதி அளிப்பது மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *