பாகிஸ்தான் பனிச்சரிவு விபத்து: பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா காலமானார்!| Mountaineer Nirmal Purja dead in Pakistan avalanche, says his company

Spread the love

பிரபல மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா பாகிஸ்தானில் உள்ள “ப்ராட் பீக்’ மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக ‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் உள்ள அமைந்துள்ள ‘ப்ராட் பீக்’ சிகரம் உலகின் 12வது மிக உயரமான சிகரம்.

நிர்மல் புர்ஜா

நிர்மல் புர்ஜா

இங்கு நேற்று முன்தினம் (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கரப் பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உள்ளிட்ட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில்தான் நிர்மல் புர்ஜா உயிரிழந்துவிட்டதாக அவரது ‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இவருடன் சேர்த்து மலையேற்ற வீரர்கள் பலரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புக் குழுவினர் பனிச்சரிவு நடந்த பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *