புதினின் ஆரஸ் செனாட் கார்: மோடி பயணித்த பாதுகாப்பான காரின் சிறப்புகள்|Bulletproof, Blast-Proof, Luxury: Inside Putin’s Aurus Senat

Spread the love

இந்தியப் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் அரசியல் ரீதியான உறவைத் தாண்டி, இருவரும் நல்ல நண்பர்கள்.

இந்த நட்பு இருவரின் ஒவ்வொரு சந்திப்புகளிலுமே நன்கு தெரியும்.

கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இருவரும் புதினின் ‘ஆரஸ் செனாட்’ காரில்தான் பயணித்தனர். அதேபோல, இன்று இருவரும் இதே காரில் பயணித்திருக்கின்றனர். பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்திருக்கிறார் புதின்.

இருவரும் இன்று டெல்லியில் இருக்கும் பாரத் மண்டபம் கருத்தரங்கு மையத்தில் சந்தித்துக்கொண்டனர்.

அதன்பின், அதே வளாகத்தில் உள்ள ‘INNOPROM தொழில் துறை கண்காட்சி’க்கு புதினின் காரில் சென்றிருக்கின்றனர்.

புதின் - மோடி

புதின் – மோடி

புதினுக்கு ஆபத்துகள் ஏராளம் என்பது அனைவரும் அறிந்ததே. அவரைக் கொலை செய்யும் முயற்சிகளும் நிறைய முறை நடந்துள்ளன.

இதனால், புதினின் பாதுகாப்பிற்காகவே ‘இது அளவு எடுத்துச் செய்த கார்’ என்றுகூடக் கூறலாம்.

இந்தக் காரின் சிறப்பம்சங்கள்: இந்தக் காரை எந்தப் புல்லட்டும் துளைக்க முடியாது.

புல்லட் என்ன புல்லட்… இந்தக் காரை ஏவுகணைகள், டிரோன்களால் கூடத் தகர்க்க முடியாது. அந்த அளவிற்குப் பக்கா பாதுகாப்பாக இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *