‘பெடி’ பட சர்ச்சை: “ஜான்வி கபூர் கதாபாத்திரம்” – பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!| Director Buchi Babu Sana has issued a public apology to the fans.

Spread the love

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஜான்வி கபூர் “அச்சியம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ஒரு கமர்ஷியல் மசாலா படமாக வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில், ஜான்வியின் கதாபாத்திரம் காட்டப்பட்ட விதம், தவறான கேமரா கோணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, துன்புறுத்தல், சம்மதமில்லா செயல் ஆகியவற்றை சாதாரணமாக்குவது போன்ற வசனங்கள் ஆகியவை இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை எவ்வாறு எழுத வேண்டும், எப்படித் திரையில் காட்ட வேண்டும் என்பது குறித்த விவாதங்களும் இதனால் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா சமூக வலைத்தள பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *