
உயர் துல்லிய மார்பகப் பரிசோதனைக்காக அதிநவீன ‘2டி டிஜிட்டல் மேமோகிராபி’ சாதனத்தை நிறுவியிருக்கும் வி.எஸ். மருத்துவமனை.
50-மைக்ரான் பிக்சல் அளவிலான உயர் துல்லியமான படங்கள், மார்பகத் திசுக்களில் ஏற்படும் மிகச்சிறிய கால்சியம் படிமங்களைக் கூட தெளிவாகப் படம் பிடித்து நோய் பாதிப்பை கண்டறிய உதவுகிறது.
மேம்பட்ட 2D டிஜிட்டல் மேமோகிராபி தொழில்நுட்பம், பரிசோதனையில் மார்பக புற்றுநோய் இருக்கிறதா என துல்லியமாக கண்டறிய துணைபுரிகிறது. 2026 நவம்பர் மாதம் முழுவதும் பொருளாதார வசதியற்ற, பின்தங்கிய பெண்களுக்கு ‘இலவச மேமோகிராம் பரிசோதனை’ மருத்துவமனையில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7448850500 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
சென்னை, நவம்பர் 11, 2026:* மார்பகப் புற்றுநோய்க்கான அடிப்படை பரிசோதனை மற்றும் நோயறிதலின் துல்லியத்தை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த அளவிலான கதிர்வீச்சுடன் கூடிய அதிநவீன 2டி டிஜிட்டல் மேமோகிராபி சாதனத்தை வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஃப்யூஜிஃபிலிம் நிறுவனத்தின் ‘AMULET SOPHINITY’ எனப்படும் இச்சாதனத்தில், 50-மைக்ரான் பிக்சல் அளவிலான உயர்-தெளிவுத்திறன் கொண்ட கண்டறிதல் கருவி உள்ளது. இது மார்பகத் திசுக்களை மிகத் தெளிவாகப் படம்பிடிப்பதோடு, ஆரம்பகாலப் புற்றுநோய்க்கான அறிகுறிகளான மிக நுண்ணிய கால்சியம் படிமங்களைக் கூட எளிதாகப் படம் பிடித்து காட்டுகிறது.
நோயாளிகளின் சௌகரியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில், பிரத்யேக வடிவமைப்பு, உடலுக்கு ஏற்றவாறு வளைந்துகொடுக்கும் அமைப்பு, நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய அழுத்தம் மற்றும் தானியங்கி அழுத்த நீக்க வசதிகள் உள்ளன. இதனால், மார்பகப் பரிசோதனையின் போது ஏற்படும் அசௌகரியம் பெருமளவு குறைக்கப்படுகிறது. மேலும், இதில் உள்ள நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஒவ்வொருவரின் மார்பக அமைப்புக்கு ஏற்ப எக்ஸ்-ரே கதிர்வீச்சின் அளவை தானாகவே சீரமைப்பதுடன், படங்களின் தரம் குறையாமல் பாதுகாக்கிறது.
இந்த அதிநவீன 2டி டிஜிட்டல் மேமோகிராபி சாதனம் மார்பகத் திசுக்களை உயர் துல்லியத்துடன் படம்பிடித்து காட்டுவதால், கதிரியக்கவியல் நிபுணர்கள் மார்பக அமைப்புகளை முழுமையாகப் பரிசோதித்து, நுண்ணிய கால்சியம் படிமங்கள் உள்ளிட்ட அசாதாரண மாற்றங்களை எளிதில் கண்டறிய இது உதவுகிறது. மேலும், நோயாளிகளைச் சரியான நிலையில் வைத்துப் பரிசோதிக்கவும், சீரான தரத்தில் படங்களை எடுக்கவும் உதவும் செயற்கை நுண்ணறிவு (AI) வழிகாட்டுதல் வசதியும் இச்சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.
வழக்கமான ஒரு படத்தை எடுக்க வெறும் 5 வினாடிகளும், உயர் துல்லியம் கொண்ட படமெடுக்க 12 வினாடிகளும் மட்டுமே இந்தக் கருவி எடுத்துக்கொள்கிறது என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். கதிரியக்கப் பரிசோதனைக்கான துல்லியமான படங்களை வழங்கும் அதே வேளையில், பரிசோதனை செயல்முறையையும் இது எளிதாக்கி, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
அதிநவீன மேமோகிராஃபி சாதன தொடக்கவிழா நிகழ்வில் வி.எஸ். மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்பிரமணியன் பேசுகையில், “பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்றாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சையின் வெற்றி விகிதத்தை அதிகரிக்க மிகவும் அவசியம். மார்பகத்தில் உள்ள கட்டிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய மேமோகிராபி பரிசோதனை ஒரு சிறந்த கருவியாகச் செயல்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே எங்கள் மருத்துவமனையில் இந்த அதிநவீன டிஜிட்டல் மேமோகிராபி சாதனத்தை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்தப் புதிய தொழில்நுட்பம், எமது மருத்துவமனையில் மார்பகப் பரிசோதனை சேவைகளை மேலும் வலுவாக்கும்; அதிக எண்ணிக்கையிலான பெண்கள், தயக்கத்தை தவிர்த்து குறிப்பிட்ட காலஅளவுகளில் மார்பக பரிசோதனை செய்துகொள்ள இது பெரிதும் ஊக்கமளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் நோயறிதல் செய்யப்பட்ட உடனேயே சிகிச்சையை தொடங்கி குணம் பெறுவதை இது ஏதுவாக்கும்” என்று தெரிவித்தார்.
பெண்கள் தங்களின் மார்பக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக, 2026 நவம்பர் மாதம் முழுவதும் பொருளாதார வசதியற்ற, பின்தங்கிய பெண்களுக்கு ‘இலவச மேமோகிராம் பரிசோதனையை’ வி.எஸ். மருத்துவமனை வழங்குகிறது. அவர்கள் இந்தப் பரிசோதனையைப் பெற்று, நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையின் மூலம் குணம் பெறுவதற்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக அமையும்.