பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயால் சிறுவயதில் தத்தெடுக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சஹாரா ஷா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து தனது முதல் நேபாளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தன் வளர்ப்பு மகளின் இந்த வளர்ச்சியைக் கண்டு எமோஷனலாகப் பேசியிருக்கும் விவேக் ஓபராய், “இது எனக்கு மிகவும் பெருமையான ஒரு தருணம். உன் திரையுலகப் பயணத்தில் நீ உச்சியைத் தொட வேண்டும் என்று விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

நீ ஒரு வெற்றியாளர் என்பதை எப்போதும் மறந்துவிடாதே; புற்றுநோயை எதிர்த்துப் போராடி வென்று, இன்று வாழ்க்கையில் சாதனை படைத்திருக்கிறாய். நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பெருமையால் அழுகிறேன்.
இரண்டரை வயதில் சிவந்த கண்களுடனும், வெளிறிய முகத்துடனும் புற்றுநோயை எதிர்த்துப் போராடி கீமோதெரபி சிகிச்சை பெற்ற ஒரு சிறுமியாகத்தான் அவளை நான் பார்த்தேன். ஆனால் அவளிடம் ஒரு போராட்டக் குணம் இருந்தது.

அவள் என் விரலை பிடித்த விதத்திலேயே அவள் நிச்சயம் வெல்வாள் என்று எனக்குத் தெரியும். அவளுக்காக தினமும் பிரார்த்தனை செய்தேன். இன்று அவள் புற்றுநோயில் இருந்து முற்றிலும் குணமடைந்து, தன் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுகிறாள். அவளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.