நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.
தவெக அரசு குறித்து வானதி சீனிவாசன், “இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிற கட்சிகளில் உள்ள நபர்களை எவ்வாறு ராஜினாமா செய்ய வைப்பது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மையான ஆட்சியைத் தருவதாகக் கூறிவிட்டு, மறைமுக பேரம் மற்றும் அழுத்தங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, பெரும்பான்மை பெறுவதற்காக இந்த அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தி வருகிறது.

மக்களின் தீர்ப்பை ஏற்று கூட்டணியுடன் ஆட்சி நடத்தினாலும், குறுக்கு வழியில் பெரும்பான்மை பெறுவதற்காகப் பண மற்றும் அதிகார பேரங்களில் இக்கட்சி ஈடுபடுகிறது.
இவர்களின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பிற்கும் ஜனநாயகத்திற்கும் உரிய மரியாதை அளிக்கிறதா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.
அதுமட்டுமின்றி, தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சரின் தந்தை ஆய்வு செய்வதும், கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைப்பதும், மாநகராட்சி கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நபர்கள் தலையிடுவதும் தொடர்கிறது.