ஒரு ஃபண்ட் மேனேஜருக்கு 50-க்கும் மேற்பட்ட பங்குகளை கவனிப்பது எளிது. காரணம், அவர் அந்தளவிற்கு டீம் வைத்திருப்பார். ஆனால், ‘நமக்கு நாமே’ என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பகுதி நேரம் மட்டுமே டிரேடிங் மற்றும் முதலீட்டில் ஈடுபடுபவர்கள் தங்களால் எவ்வளவு பங்குகளின் பெயரை நியாபகம் வைத்திருக்க முடியுமோ, அத்தனை பங்குகளை மட்டும் போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பது நல்லது.
காரணம், ஒரு நிறுவனம் குறித்த செய்தி வரும் போது, நாம் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் பங்கு நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கிறதா என்பது கட்டாயம் தெரிய வேண்டும்.
அது தான் நமக்கும் நல்லது. நமது போர்ட்ஃபோலியோவிற்கும் நல்லது.”