போலி வங்கிக் கணக்குகளை வைத்து 15 நாளில் ரூ.9 கோடி மோசடி; கல்லூரி மாணவர்களைக் குறிவைக்கும் கும்பல் \ ₹9 crore fraud committed in 15 days by opening 11 bank accounts in names of students seeking part-time jobs

Spread the love

அங்கு அவர்களை மற்ற மூன்று பேருக்கு கேப்டன் அறிமுகப்படுத்தினார். அங்கு அவர்களுக்கு பயோமெட்ரிக் பயன்படுத்தி வங்கிக்கணக்கு திறக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வேலைக்கு அழைக்கவில்லை. சட்டக்கல்லூரி மாணவரான பரத்கர், சில வாரங்களுக்குப் பிறகு வேலைகளைப் பற்றி எதுவும் கேட்காததால் சந்தேகமடைந்தார்.

தங்களுடைய ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று கவலைப்பட்ட ஐந்து நண்பர்கள், ஒரு மாதத்தில் தங்கள் பெயரில் ஏதேனும் புதிய கணக்குகள் திறக்கப்பட்டு உள்ளதா என வங்கிகளில் சோதனை செய்தனர்.

இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அவர்கள் பெயரில் திறக்கப்பட்டு இருந்த 11 கணக்குகள், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கிரைம் புகார்களைத் தொர்ந்து முடக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், நாங்கள் ஒருபோதும் செய்யாத மோசடிக்காகக் கைது செய்யப்படலாம் என்று அச்சம் அடைந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். இந்த மோசடி தொடர்பாக ஜூன் முதல் வாரத்தில் அந்தேரி நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த 400 பக்க குற்றப்பத்திரிகையில், 75 கணக்குகள் தேசிய சைப்-ஆர்கிரைம் ரிப்போர்டிங் வெப்சைட்டில் இணைக்கப்பட்டுள்ளதாக போலீசார் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

5 மாணவர்கள் பெயரில் 15 நாட்களில் 11 வங்கிக்கணக்கில் ரூ.9 கோடி பரிவர்த்தனை செய்துள்ளனர்

சைபர் கிரைம்

சைபர் கிரைம்

தாகூர், மாணவர்களுக்குத் தெரியாமல் வங்கிக்கணக்கு திறக்கப்பட்ட பிறகு வழங்கப்படும் ஏ.டி.எம்.கார்டு போன்ற விபரங்களை வாங்கிச்சென்றார். அவற்றை மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பி இருந்தார். இம்மோசடியில் முக்கிய குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *