மகளிர் T20I: அதிக ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தானா வரலாற்று சாதனை! | Smriti Mandhana has set a record for scoring the most runs in women’s T20I matches.

Spread the love

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை குரூப்-ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, அனைத்து சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசியதன் மூலம், மிதாலி ராஜ் வைத்திருந்த 10,868 ரன்கள் சாதனையை அவர் கடந்தார்.

ஸ்மிருதி மந்தானா

ஸ்மிருதி மந்தானா

தற்போது அனைத்து வடிவ மகளிர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள் குவித்தவர்களில் ஸ்மிருதி மந்தனா 10,880 ரன்களுடன் முதலிடத்திலும், மிதாலி ராஜ் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (10,740 ரன்கள்) மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (10,273 ரன்கள்) நான்காம் இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டாஃபாணி கெய்லர் (10,007 ரன்கள்) ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *