“அந்தப் பொண்ணை என்னால் மறக்கவே முடியாது!” – மகாராஜாவைப் பார்த்து வியந்த டாம் ஹாங்க்ஸ்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகத்தில் (LACMA) நடைபெற்ற நிகழ்ச்சியில்… ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டாம் ஹாங்க்ஸ் “மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் 2024-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்ராஜ் (நட்டி) மற்றும் அறிமுக நடிகை சச்சனா நமிதாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான திரைக்கதையும், நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் நடித்ததற்காக சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் நடித்த இளம் நடிகை சச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.
டாம் ஹாங்க்ஸை வியக்க வைத்த மகாராஜா!
சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் (International Academy of Television Arts & Sciences) நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா, இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற LACMA கலை நிகழ்ச்சி ஒன்றில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்த கவிதா குப்தாவிடம், இந்தியாவில் இருந்து பார்க்க வேண்டிய மூன்று திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
அதன்படி, கவிதா குப்தா பரிந்துரைத்த திரைப்படங்களில் ‘மகாராஜா’வும் இடம்பெற்றுள்ளது.