மதுரை மாநகர் சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சிவனடியார் பரமசிவம்.
இவர் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் பரமசிவம் இறந்து போனார் என அவருடைய மனைவி அய்யம்மாள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், “கடந்த ஜூலை 16-ஆம் தேதி, எங்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாகை கிருஷ்ணன் என்பவருக்கும் வாகனம் நிறுத்துவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.