மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி தப்பியோட்டம் – மடக்கிபிடித்த போலீசார்! | Convict escapes after being sentenced at Madurai District Court – apprehended by police

Spread the love

கடந்த 2024 மே 20 ஆம் தேதி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையின்போது  ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  

இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன் , தாமரைக்கண்ணன், மாதவன், ராஜா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது மதுரை மாவட்டம் முதலாவது போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று  நீதிபதி சுதாகர் முன்பாக  இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து 6 பேரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 10 வருட சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து  உத்தரவிட்டார்.

இந்நிலையில் தண்டனை விபரங்களைக் கேட்ட சிறிது நேரத்தில் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ராஜா அங்கிருந்து நைசாக நழுவி தப்பியுள்ளார்.

மதுரை மாவட்ட நீதிமன்றம்

மதுரை மாவட்ட நீதிமன்றம்

இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் குற்றவாளி ராஜாவைத் தேடிய நிலையில் ராஜா தப்பியோடியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்துநிலையம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ராஜாவைத் தீவிரமாகத் தேடினர்.

இதையடுத்து திண்டுக்கல் அருகே தப்பியோடிய குற்றவாளியான ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *