மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள பிரபல திரையங்கு கட்டிடத்தில் தீ விபத்து

Spread the love

மீனாட்சியம்மன் கோவில் குடமுழக்குவிழா வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் யாகசாலை நேற்று மாலை தொடங்கியது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி பழமையான கட்டிடங்கள் குறித்து தீயணைப்புத்துறையினர் சோதனை நடத்திவந்தனர். 

இதனிடையே மேற்கு கோபுரம் அருகேயுள்ள பழமையான சென்ட்ரல் தியேட்டரின் முதல்தளத்தில் உள்ள பொம்மை பொருட்கள் குடோனில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீயானது பரவ தொடங்கி மளமளவென பற்றி எரிந்து  நகர் முழுவதிலும் கரும்புகை வானுயர அளவிற்கு எழும்பி பறந்தது.

மதுரையில் தீ விபத்து

மதுரையில் தீ விபத்து

இதையடுத்து குடமுழக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் தீயணைப்புத்துறையினரும் 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும் பழமையான கட்டிடம் என்பதால்… ஒரு புறம் இடிந்துவிழுந்துள்ள நிலையில் முழுமையாக இடிந்து விழும் அபாயம் உள்ளதால் தீயணைப்புத் துறையினரும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு போராடி  தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கோவிலை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென பழமையான கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *