மின்சார உதடுகள்-ரகசிய அறிவியல் – Kumudam

Spread the love

10.ரகசிய அறிவியல்

“மின்சார உதடுகள்.. கேட்கவே நன்றாக இருக்கிறதே.” ஷில்லாங் ஹோட்டல் ரூமில் மேலும் கேட்க விரும்பிய சில்வியா. “அதைப்பற்றி இன்னும் விவரமாகச் சொல்லுங்கள்?” என்று ராதிகாவிடம் கேட்டாள்.
ராதிகா இதற்கு முன்பும் ‘மின்சார உதடுகளைப் பற்றிப் பல முறை சில்வியாவிடம் சொல்லியிருக்கிறார். அவ்வளவு ஏன்… இன்று காலை மேட்ச் விளையாடப் போகும்போதுகூடச் சொன்னார். ஆனால், மின்சார உதடுகள் என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. அவ்வளவுதான்.
“உதடுகள் மற்றவர்களுடன் பேசப் பயன்படுகின்றன. மின்சார உதடுகளால் நம்மோடே பேசலாம்.”
“அப்படீன்னா?” அடித்தது.

 இந்தக் கேள்வி கேட்டபோது, காலிங் பெல் யாரென்று பார்க்க எழுந்து போய்க் கதவைத் திறந்தாள் சில்வியா. வெளியே நின்றிருந்தவரைப் பார்த்ததும், சந்தோஷ ஆச்சரியத்தில் விழுந்தாள்.
“ஹாய்… இனியா ஆன்ட்டி… வாங்க, வாங்க… நீங்க காலையிலேயே வந்திருக்கலாமே! அநியாயமா ஒரு மேட்ச் தோத்துட்டோம். நீங்க வந்திருந்தா செகண்ட் குவார்ட்டர்ல ஸ்ட்ரேட்டஜி மாத்திக் கொடுத்து இருப்பீங்க! ஐ ஏம் ஹேப்பி! அட்லீஸ்ட்… இப்பவாவது வரத் தோணுச்சே!” இனியாவின் கைகளைப் பிடித்து இழுத்த வண்ணம் சொன்னாள் சில்வியா.

இனியா தன் கையில் ஒரு புக் கொண்டு வந்திருந்தார். ‘ரகசியங்களின்”டான் பிரெளனின் லேட்டஸ்ட் எடிஷன். நான் இன்னும் படிக்கலை. ஆனா புத்தகத்தைப் பற்றிப் படிச்சேன். நோயடிக் சைன்ஸ் பற்றிப் போகுது. எனக்கு ஓரளவு நம்பிக்கை உண்டு” என்ற இனியா, புத்தகத்தை நீட்டினார்.
தொடர்ந்து ஓர் உண்மை நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார். சின்ன சம்பவம் தான்,

“மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று ரமணரிடம் கேட்டபோது, அவர் சொன்னாராம், ‘மற்றவர்கள்’ என்று யாருமில்லை என்று. இதை ஒரு ஐடியா என்று கூடச் சொல்லலாம். ஆனால், இதை ஏன் எனக்குச் சொல்லத் தோன்றியது என்று தெரியாது!” என்றார் இனியா.
“ஓ மை காட்! இதைத்தான் அம்மாவும் சொல்ல வந்தாங்க மற்றவங்க என்று யாருமில்லை என்றால், நாம பேசுகிற உதடுகள் யாரோடு பேசுது?” என்றாள் சில்வியா.
“ஆயிரம் வருஷம் முன்னாடி திருமூலர்னு ஒருத்தர் இருந்தார். ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ன்னு பாட்டு எழுதினாரு. அவரு சொன்னதெல்லாம் மந்திரம் என்கிறோம். தன்னை அறியணும்னா தன்னோடு பேசணும். அப்படிப் பேசுகிற உதடுகள்தான் ‘மின்சார உதடுகள்’. புரிஞ்சதா?” விளக்கினார் ராதிகா.
“புரிஞ்ச மாதிரிதான் இருக்கு. பிறகு, நாங்க என்ன எங்களோடா தோற்றோம்..? அதான் தோற்றுவிட்டோம் என்று சொல்கிறார்களே?” மடக்கப் பார்த்தாள் சில்வியா.
“இப்போ, இங்கே யார் சொல்றா? அது உன் மனதைக் குத்தும் இரண்டாவது அம்பு. அதைத் தூர எறி! நீ நிகழ் காலத்தில் இருந்தால் மின்சார உதடுகள் கிடைக்கும்!”
அவளை நிலைப்படுத்த முயன்றார் ராதிகா.

“அம்மாவும் மகளும் இந்த சப்ஜெக்ட்தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்களா… கான்ஷியஸ்னெஸிற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள இணைப்பைப் பற்றி அறிவது தான் நோயடிக் சைன்ஸ் என்று சொல்கிறார்கள்!” என்ற இனியா தொடர்ந்தாள்…
“இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் இணைந்து ஒன்றாக இருக்கிறது. ‘அத்வைதம்’ என்கிற கொள்கை அதைப் பற்றிச் சொல்கிறது. கலெக்டிவ் கான்ஷியஸ்னெஸ் என்று ‘யூங்’ என்கிற உளவியலாளர் சொன்னதும் கிட்டத்தட்ட இதுதான்.

 அம்மா மனசும் என் மனசும் ஒன்றாய் இருப்பதால்தான் அவங்க ஆரம்பிச்சதை நான் முடிச்சேன்!”
இனியா சொல்லச் சொல்ல சில்வியாவிற்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. ஆனால், தலை சுற்றுவது போலவும் இருந்தது. “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கன்ஃப்யூஸ் பண்ணிட்டீங்க. இப்போதைக்கு உடம்பெல்லாம் செம்ம வலி. தூங்கப் போகிறேன். ஆனால். ‘மின்சார உதடுகள்… பிற்காலத்தில் அதைப் பற்றி ஆராய்வேன். இன்னொன்றும் சொல்றேன், கேட்டுட்டு மொத்தமா தூங்கு. வள்ளுவர் தூங்குவதை ‘சாவு’ என்றுதான் சொல்லி இருக்கார். ‘மின்சார உதடு’ இருந்தா,. நீ உன் முன்பிறவியில் இறந்த உன்னோடு கூடப் பேசலாம். உதாரணமா, போன பிறவியில் ஒரு பத்து பவுன் நகையைப் புதைச்சு வெச்சிருந்தால், இந்தப் பிறவியில் அதைத் தோண்டி எடுக்கலாம்!” என்றார் ராதிகா.

“அம்மா… இதெல்லாம் சுத்தமா நம்புற மாதிரி இல்லே. கொஞ்சம் சூப்பர்ஸ்டீஷியஸா தோன்றுகிறது. இதுக்கு சயின்ஸ்ன்னு வேற பேரு. எனக்குச் சிரிப்புப் சிரிப்பா வருது. தூக்கந் தூக்கமா வருது” என்று சிரித்துக் கொண்டே தூங்கச் சென்றாள் சில்வியா. ஆனால், அவளுடைய சப்கான்ஷியஸ் மைண்டில் ஏதோ ஒன்று விழித்துக் கொண்டது. அது அவளை எங்கோ கொண்டு செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *