என் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சார், இந்தத் திரைப்படத்தை நம்பியதற்கும் எங்களுக்கு ஆதரவளித்ததற்கும் நன்றி. ரெஜினா, உங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள்.
குஷ்பு மேம் மற்றும் சினேகா மேம், உங்கள் இருவருடனும் இந்தத் திரைப்படத்தில் பங்கேற்றது நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயம். உங்கள் இருவருக்கும் என் பேரன்புகள்.
இப்படிப்பட்ட ஒரு அருமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன்.
இப்போது, நாங்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் அனுபவிப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.