மேகதாது: “தமிழ்நாட்டைp பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸை தவெக அரசு…” – கனிமொழி கண்டனம் | DMK MP Kanimozhi statement regarding the Mekedatu dam issue

Spread the love

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்ததற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் -  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

முதல்வர் விஜய் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மேற்கு மண்டலத்தில் தொடங்கி தஞ்சை டெல்டா வரை தமிழ்நாட்டில் பாதியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டத்தை, திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது.

தற்போது, தவெகவின் அமைச்சரவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் பங்குகொண்டிருக்கும் நிலையில், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலையிட்டு உடனடியாக அத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *