ரஜினி படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து! – கமல் தயாரிக்க, வருகிறார் `The Deadly Doctor' – டைட்டில்?

Spread the love

‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

‘தலைவர் 173’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ரஜினி - கமல்
ரஜினி – கமல்

ஆனால் அறிவித்த ஒரு வாரத்தில் அந்தப் படத்தில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சி.பி சக்கரவர்த்தி ‘தலைவர் 173’ படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

பிறகு அவரும் இந்தப் படத்தில் இருந்து விலக ஓ மை கடவுளே’, `டிராகன்’ படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் ‘தலைவர் 173’ படத்தின் பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல், அஷ்வத் மாரிமுத்து, சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் ‘தலைவர் 173’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. படத்தின் பெயர் ‘தர்மன்’ என்று வைக்கப்பட்டிருக்கிறது.

டைட்டிலின் கீழ் `The Deadly Doctor’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *