ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடந்தே போய்விடலாம்.. வெறும் 4 கிமீயில் 21 மணி நேர வித்தியாசம் | You can walk from Russia to the US: day changes across a distance of just 4 km, geographical secrets

Spread the love

International

oi-Velmurugan P

மாஸ்கோ: உலக வரைபடங்கள் பல்வேறு விசித்திரங்களை கொண்டு இருக்கிறது. நேற்று அமெரிக்காவின் அருகே ஒரு தீவில் நிலநடுக்கம் வந்தது. அதற்காக மேப் தேடிய போது, உலக வரைபடத்தில் ஒரு விசித்திரமான உண்மை புலப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா இடையே உள்ள பிக் டயோமிட் மற்றும் லிட்டில் டயோமிட் தீவுகள் இடையே வெறும் 3.8 கிமீ தூரம் தான். வடதுருவப்பகுதியான அங்கு பனிக்காலத்தில் கடல் இறுகிவிடும். அதில் நடந்த போய்விடலாம் என்பது தெரியவந்தது. இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், வெறும் 3.8 கி.மீ தூரம் ஒரு நாளையே மாற்றுகிறது என்பது தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு நடந்தே போய்விடலாம்.. திங்கள் கிழமை நடந்தால், அதற்கு முதல் நாளா ஞாயிறுக்கு டைம் டிராவல் போய்விடலாம் என்றால் நம்ப முடிகிறதா.. உலகின் அதிசயங்கள் பற்றி இரண்டு தீவுகள் பற்றி முழுமையாக பார்ப்போம்.

You can walk from Russia to the US day changes across a distance of just 4 km geographical secrets

உலக வரைப்படம் தட்டையாக பார்க்கும் போது ஒரு அளவிலும், உருண்டையாக பார்க்கும் போது ஒரு வடிவலும் இருந்தது.. இந்த குழப்பம் ஏன் வருகிறது. அண்டார்டிகாவின் தென்துருவம் ஆகவும், வடதுருவத்தில் கிரீன்லாந்தும் இருப்பதை காண முடிந்தது. இதுபற்றி ஆய்வு செய்த போது, அதாவது இந்தியாவின் நேராக 3டி வடிவ கூகுள் மேப் உருண்டை சுற்றி பார்த்தால், நமக்கு மேலே அப்படியே உச்சியில் ரஷ்யா இருப்பது தெரிந்தது. அடுத்ததாக அப்படியே சுற்றினால், கனடா, அமெரிக்கா வந்தது.

ஆனால் நாம் வழக்கமாகப் பார்க்கும் தட்டையான உலக வரைபடத்தில் அமெரிக்கா இடது ஓரத்திலும், ரஷ்யா வலது ஓரத்திலும் வெகு தொலைவில் இருப்பது போல எனக்கு தோன்றியது.உண்மையில் பூமி பந்து போல உருண்டையாக இருப்பதால் இந்தியாவின் வடக்கு திசையில் ரஷ்யா தெரிந்தது . அத்துடன் பூமியின் உச்சிப் பகுதியான வட துருவம் வழியாகப் பார்த்தால், ரஷ்யாவின் தலைக்கு மேலே மறுபக்கம் அமெரிக்காவின் அலாஸ்கா பகுதி வளைந்து வந்தது.

அதேபோல் இன்னொரு விசித்திரமான உண்மையும் தெரியவந்தது. பூமி உருண்டை என்பதால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இரண்டு வழிகளிலும் செல்ல முடிகிறது. மேற்குப் பாதை வழியாக இந்தியா, பாகிஸ்தான், லண்டன் , அட்லாண்டிக் கடல் , அமெரிக்கவின் கிழக்கு பகுதிக்கு போக முடிகிறது. அடுத்தாக கிழக்கு பாதையை ஆய்வு செய்தால், இந்தியா, ஜப்பான், பசிபிக் பெருங்கடல், வழியாக அமெரிக்காவின் மேற்கு பகுதிக்கு போக முடியும் என்கிற உண்மை தெரியவந்தது.

அடுத்து செய்த ஆய்வில் தான் ஆச்சரியமான உண்மை தெரியவந்தது. வெறும் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இருப்பது வியப்பாகவே இருந்தது. ரஷ்யாவின் எல்லையும் அமெரிக்காவின் எல்லையும் பிரியும் இடத்தில் ஒரு கடல் பகுதி உள்ளது. அதற்கு ‘பெரிங் நீரிணை’ என்று பெயர். இந்தக் கடலின் நடுவே இரண்டு சிறிய தீவுகள் இருக்கின்றன இதில் பிக் டயோமிட் தீவு ரஷ்யாவிற்குச் சொந்தமானதாக இருக்கிறது.
அதேபோல் லிட்டில் டயோமிட் தீவு அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இந்த இரண்டு தீவுகளுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 3.8 கிலோமீட்டர் மட்டுமே என்பது ஆச்சரியமான உண்மை.

பனிக்கட்டி மீது நடந்தே அமெரிக்கா போக முடியும்

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை) இந்தக் கடல் பகுதி கடுமையான குளிரால் அப்படியே தடிமனான பனிக்கட்டிப் பாலமாக உறைந்துபோய்விடும் என்பது தெரியவந்துள்ளது. டெக்னிக்கலாக நீங்கள் பார்த்தால், இந்த உறைந்த பனிக்கட்டியின் மீது ஒரு மனிதன் ரஷ்யத் தீவிலிருந்து அமெரிக்கத் தீவிற்கு நடந்தே சென்றுவிட முடியும்! (ஆனால், சர்வதேச பாதுகாப்புச் சட்டங்களின்படி இங்கு எல்லை தாண்ட அனுமதி கிடையாது). சர்வதேச ஊடகங்களான பிபிசி , நேஷனல் ஜியோகிராஃபிக் போன்ற முன்னணி நிறுவனங்களில் தான் இந்த தகவல்களை ஆச்சரியமாக பகிர்ந்துள்ளன.

வெறும் 3.8 கி.மீ தூரம் ஒரு நாள் மாறுகிறது

ரஷ்யாவின் பிக் டயோமிட் தீவும், அமெரிக்காவின் லிட்டில் டயோமிட் தீவும் உலகின் ஆச்சரியமான அதிசயத்தை நிகழ்த்துவ தெரியவந்துள்ளது. அதாவதுஇந்த இரண்டு தீவுகளுக்கும் நடுவில்தான் உலக நேரத்தை நிர்ணயிக்கும் கற்பனைக் கோடான ‘சர்வதேச தேதிக்கோடு’ கடந்து செல்கிறது. இதன்காரணமாக, இரண்டு தீவுகளுக்கும் இடையே 21 மணி நேர வித்தியாசம் இருக்கிறது.

இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.. “அப்படியென்றால் ரஷ்யத் தீவில் பகல் என்றால், அமெரிக்கத் தீவில் இரவாக இருக்குமா?” என்பது கேள்வியாக இருக்கும். அப்படி எல்லாம் இல்லவே இல்லை, இரண்டு தீவுகளிலும் பகல் மற்றும் இரவு நேரங்கள் ஒன்றாகவே இருக்கும்! ஒரே நேரத்தில் தான் சூரியன் உதிக்கும், ஒரே நேரத்தில் தான் மதியம் இரவு வரும். ஆனால், காலண்டர் தேதி மற்றும் கிழமைகள் முற்றிலும் வேறாக இருக்கும்.

உதாரணமாக, இரண்டு தீவுகளிலும் நல்ல பிரகாசமான மதியம் 12 மணி என்று வைச்சுங்கங்க. அமெரிக்காவின் Little Diomede தீவில் இருப்பவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு உணவு சாப்பிடும்போது, அவருக்கு நேரே வெறும் 4 கி.மீ தொலைவில் கண்ணுக்குத் தெரியும் ரஷ்யத் தீவான Big Diomede தீவில் இருப்பவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு காலை உணவு சாப்பிடுவார்

இதனால்தான் இந்தத் தீவுகளை உலக மக்கள் “நாளை தீவு” ரஷ்யா மற்றும் “நேற்று தீவு” அமெரிக்கா என்று விசித்திரத்தை அழைக்கிறார்கள். வெறும் 4 கிலோமீட்டர் தூரத்தில், உங்களால் காலண்டரின் ஒரு நாளுக்கு முன்னாடி போக முடியும், பின்னாடியும் வர முடியும் என்பது இயற்கையும் மனித விதிகளும் இணைந்த பெரிய அதிசயம் தான். டைம் டிராவல் பண்ண விரும்புவோர் இங்கு போய் பாருங்கள். நிச்சயம் சாத்தியம் தான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *