இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ‘இது எங்களின் ஆய்வு வரம்புக்குள் வராது’ எனக் கூறியிருக்கிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், ‘SC/ST ஆணையம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுக்கு நான்கு முறை விழிப்புணர்வு முகாம்களை நடத்தியிருக்கிறது. எனில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன? பல சாதிய வன்கொடுமைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மனோபாவத்தோடு நடந்துகொள்கின்றனர்.
அதேமாதிரி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே பிரிவினைகளால் மோதலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க அவர்களின் சமூக சூழலை புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தானே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படை விஷயத்தை கூட ஆணையத்தால் செய்ய முடியாது எனக் கூறுவது வேதனையளிக்கிறது’ என்றார்.