‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
ரஷ்யா மீது பல பொருளாதார தடைகள் விதித்து நெருக்கடி கொடுத்தது அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும். ஆனால், ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி மூலம் மற்ற பொருளாதார தடைகளைச் சமாளித்து விடுகிறது.
இதற்குச் செக் வைக்கத்தான் அமெரிக்கா இப்போது ‘ரஷ்யா தடைகள் சட்டத்தை’ கொண்டுவந்துள்ளது. இந்தத் தடை சட்டம் ரஷ்யாவிற்கு மட்டுமல்ல… ஈரானுக்கும்தான்.

இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகள், அமெரிக்காவிற்கு ஏதேனும் ஏற்றுமதி செய்தால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இந்தச் சட்டத்தை முதன்முதலில் ட்ரம்பிற்கு நெருக்கமான லிண்ட்சி ஓ. கிரஹாம் பரிந்துரைத்தார். அவர் காலமாகிவிட்டார். இதனால், அவர் நினைவாக, இந்தச் சட்டத்திற்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது.