மேஷம்
மனதுக்குப் பிடித்த வகையில் மாற்றமும் ஏற்றமும் வரக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை பேசப்படும். சிலருக்குப் பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும். இளம் வயதினர் பெற்றோர், பெரியோரரின் ஆதரவினைப் பெறுவீர்கள். வீடு, வாகனம் மாற்ற சந்தர்ப்பம் வரலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். கலைஞர்களுக்கு அனுகூலமான காலகட்டம். வயிறு உபாதை, பூச்சி தொல்லை வரலாம். சங்கரனைத் துதியுங்கள், சந்தோஷம் அதிகரிக்கும்.
ரிஷபம்
எண்ணங்கள் ஈடேறத்தொடங்கும் காலகட்டம். பணியிடத்தில் மாற்றமும் ஏற்றமும் வரும். பூர்வீக சொத்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வரவு சீராகும். சேமிக்கப் பழகுவது நல்லது. ஆடம்பர ஆபரணத்தில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சிகள் அவசியம். கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். வாகனப் பயணத்தில் வேகம் வேண்டாம். ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம். சுதர்சனர் வழிபாடு, சுபிட்சம் சேர்க்கும்.
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், தலைநிமிர்ந்து நடக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வு நிச்சயம் வரும். வாக்குக்கு செல்வாக்கு உயரும். இல்லத்தில் இனிமை நிலவும். வாரிசுகளுடன் தர்க்கம் தவிருங்கள். வீடு, வாகனம் புதுப்பிக்க வாங்க சந்தர்ப்பம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனம் செலுத்துங்கள். கலைஞர்கள் மேல் வீண்பழி வரலாம், கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும்போது லாகிரி வேண்டாம். கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம். தன்வந்திரி வழிபாடு தழைக்கச் செய்யும்.
கடகம்
திட்டமிட்டுச் செயல்பட்டால், சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். உடனிருப்போர் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் உடல்நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. கலைஞர்கள் பொறுப்புகளில் கவனமாக இருங்கள். இரவுப் பயணம் தவிருங்கள். எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம். துர்க்கை வழிபாடு, துளிர்க்கச் செய்யும்.
சிம்மம்
மனதில் இருந்த பயம் விலகக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உணரப்படும். பொறுப்புகளில் நேரடி கவனம் அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணைவர் உடல்நலம் சீராகும். பெற்றோர் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செய்யும் தொழிலில் உழைப்புக்கு முதலிடம் முக்கியம். கலைஞர்கள் எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நலம் சேர்க்கும்.
கன்னி
4 வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். குடும்பத்துல நிம்மதி உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் தர்க்கம் தவிருங்கள். வரவில் இருந்த தடைகள் நீங்கும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி உருவாகும். அனுபவம் மிக்கவர்களிடம் தர்க்கம் வேண்டாம். கலைஞர்களுக்குத் திறமை பளிச்சிடத் தொடங்கும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அல்சர், அலர்ஜி உபாதை வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.
விருச்சிகம்
அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம். பணி மிடத்தில் செல்வாக்கு உயரும். பொறுப்புகளில் கவனச்சிதறல் கூடாது. புறம் பேசுவது, கேட்பது கூடாது. குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும் குலதெய்வத்தைக் கும்பிடுவது ஏற்றத்தை ஏற்படுத்தும். உறவுகளிடம் தர்க்கம் வேண்டாம். செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். முதலீட்டை முடக்க வேண்டாம். கலைஞர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரத்தொடங்கும். வாகனத்தில் நிதானம் முக்கியம். அஜீரணம், வயிறு உபாதைகள் வரலாம். இஷ்டமகான் வழிபாடு, இனிமை சேர்க்கும்.
துலாம்
சுணக்கமும் சோம்பலும் ரூம் தவிர்த்தால், சர்வமும் நன்மையாகும் காலகட்டம். அலுவலகத்தில் எல்லாம் தெரியும் எண்ணம் எப்போதும் வேண்டாம். வீட்டில் விடியல் வெளிச்சம் பரவும். தடைநீங்கி விசேஷங்கள் வரத் தொடங்கும். ஆடை, ஆபரண சொத்து சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். செய்யும் தொழிலில் லாபம் வரத்தொடங்கும். கலைஞர்களுக்கு அரசு வழி பாராட்டு கிட்ட வாய்ப்பு உண்டு. நரம்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, பிரகாசிக்கச் செய்யும்.
தனுசு
பொறுப்பு உணர்வுடன் பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் நிதானமாக இருப்பதே நல்லது. வீண் தர்க்கம் யாருடனும் வேண்டாம். இல்லத்தில் நிதானமே நிம்மதி தரும். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. வாரிசுகளிடம் கடுமை வேண்டாம். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். வீடு, வாகன் மாற்றத்தில் அவசரம் வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான போக்கு நிலவும். கலை, படைப்புத் துறையினர் தலைக்கனத்தை இறக்கிவைப்பது முக்கியம். பயணப்பாதையில் உடைமைகள் பத்திரம். அஜீரணம், தூக்கமின்மை வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் தரும்.
மகரம்
பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், நன்மைகள் அதிகரிக்கும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அதேசமயம், நேரம் தவறாமை மிக முக்கியம். வீட்டில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைபட்ட விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசினால், நல்லவை தொடரும். வரவு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் ஏற்றமான போக்கு ஏற்படும். ஒப்பந்தங்களில் அவசரம் வேண்டாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். டென்ஷன், வீண் கற்பனை பயங்கள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.
கும்பம்
நினைத்தவை ஈடேறக் கூடிய நிம்மதியான காலகட்டம். அதேசமயம் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசத்தொடங்கும். எதிர்பாரா வந்தால், தவிர்க்க வேண்டாம். இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். உறவுகளுடன் நெருக்கம் உருவாகும். வாரிசுகளால் பெருமை சேரும். இடமாற்றம் யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். செய்யும் தொழில் செழிப்பாகும். இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்கள். சளி, காய்ச்சல் உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு, பசுமை சேர்க்கும்.
மீனம்
தடைகள் நீங்கக் கூடிய காலகட்டம். தலைக்கனம் தவிர்ப்பது முக்கியம். பணியிடத்தில் உங்கள் திறமை உணரப்படும். அதேசமயம், பிறரால் வீண்பழிகள் வரலாம். எச்சரிக்கை முக்கியம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். குதூகல சூழல் உருவாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். அசையும், அசையா சொத்து சேரும். ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும். செய்யும் தொழிலில் நிதானப்போக்கு நிலவும். கலை, படைப்புத் துறையினருக்கு அந்தஸ்து உயரும். பயணத்தில் வேகம் வேண்டாம். அடிவயிறு, மூட்டு உபாதைகள் வரலாம். ரங்கநாதர் வழிபாடு, ரம்யமாகச் செய்யும்.


