திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி முதல்வர் விஜய்யை கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பாடல் பாடியதாகச் சர்ச்சை எழுந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து புஷ்பவனம் குப்புசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில்,
“திருச்செந்தூரில் நடந்த இசைநிகழ்ச்சியில் நான் பாடிய பாடலில் குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவுக்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. பாராட்டுகிற நீங்கள்தானே திட்டுகிறீர்கள். ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.

நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான். “நம் தமிழக முதல்வர் போல் வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு’. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாமும் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன்.