ராமநாதபுரம்: கணவன் இறந்த துக்கம்; மனைவி எடுத்த விபரீத முடிவு; தாயின் முடிவால் ரயிலில் பாய்ந்த மகன் |Ramanathapuram Son jumps under train due to mother’s death

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது ஆக்கிடாவலசை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜாமணி கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுநீரகம் பழுதடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ராஜாமணியின் மனைவி ஜானகி கணவர் இறந்த துக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்குச் சென்றிருந்த இவரது இரு மகன்களும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

தற்கொலை செய்துகொண்ட ஜானகி

தற்கொலை செய்துகொண்ட ஜானகி
உ.பாண்டி

இதையடுத்து பூட்டியிருந்த கதவைத் தட்டியும் வெகுநேரமாகத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டு கதவினை உடைத்து சென்று பார்த்தபோது வீட்டினுள் இவர்களின் தாயார் ஜானகி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *