“ரூ.7 கோடி கொடுக்க வேண்டும்” – அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிஷ்னோய் கேங்க் பணம் கேட்டு கொலை மிரட்டலா? | Bishnoi gang issues extortion and death threats to Arvind Kejriwal and his daughter

Spread the love

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, கொலை முயற்சியில் ஈடுபட்டு வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சமீப காலமாக பாலிவுட் பிரபலங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

அவர்களின் இலக்கு இப்போது டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பக்கம் திரும்பி இருக்கிறது. டெல்லி திலக் நகர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங் என்பவருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்டு அர்விந்த் கெஜ்ரிவாலும், அவரது மகளும் ரூ.7 கோடி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அவ்வாறு கொடுக்க வில்லையெனில் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மகள் ஹர்ஷிதாவைக் கொலை செய்வேன் என்று அந்த நபர் தெரிவித்தார். இது குறித்து எம்.எல்.ஏ.ஜர்னைல் சிங் மொகாலி போலீஸில் புகார் செய்தார்.

அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால்

குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அழைப்புப் பதிவுகள், மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட இண்டர்நெட் ஆகியவற்றை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை மிரட்டலைத் தொடர்ந்து கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அவரது கட்சி ஆட்சியில் உள்ளது, மேலும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் இப்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் தனது கூட்டாளி கோல்டி பிரர் மற்றும் சர்வதேச கிரிமினல்கள் சிலரின் துணையோடு தனது கூட்டத்தை இயக்கி வருகிறான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *