வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை என பணம் பிடிக்கிறார்களா.. அக்கவுண்டை BSBD கணக்காக மாற்றுவது எப்படி | How to convert a bank account into a BSBD account: RBI explains

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: குறைந்தபட்ச இருப்பு தொகை தேவையில்லை.. கணக்கு தொடங்க ஆரம்ப வைப்பு தொகை தேவையில்லை.. இலவச ATM-டெபிட் கார்டு. இலவச இணைய வழி மற்றும் கைபேசி வங்கி வசதிகள். இலவச பாஸ்புக் மற்றும் காசோலைப் புத்தகம்..ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கை எளிதாக BSBD கணக்காக மாற்றும் வசதி போன்றவை BSBD கணக்கில் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று பலரும் வங்கி கணக்கில் பணம் பிடிப்பதாக புலம்புவார்கள்.அதேபோல் வங்கியில் அக்கவுண்ட் ஓபன் பண்ண 1000 இருக்கணும், 2000 ரூபாய் இருக்கணும் என்று சொல்வார்கள். தனியார் வங்கிகள் எல்லாம் 2500 ரூபாய், 5000 ரூபாய் இல்லாமல் குறைந்த பட்ச இருப்பாக பராமரிக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டுத்தான் வங்கியில் சேமிப்பு கணக்கை திறக்க அனுமதிக்கின்றன.

How to convert a bank account into a BSBD account RBI explains

ஆனால் பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் என்ற பிஎஸ்பிடி கணக்கை வங்கிகள் ஓபன் பண்ண முடியும். இதற்கு குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவையில்லை.. கணக்கு தொடங்க ஆரம்ப வைப்பு தொகை தேவையில்லை.. எல்லாமே இலவசம்.. ஏற்கனவே உள்ளவர்கள் மாற்றிக்கொள்ள முடியுமா என்றால், எளிதாக வங்கியில் கோரிக்கை வைத்து மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்கைத் தொடங்குங்கள். குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு அல்லது படிவம் எண் 60 உடன் சுலபமாகத் தொடங்கி விடலாம். பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்டை (பிஎஸ்பிடிஏ) எந்த ஒரு தனிநபரும் தொடங்கிவிடலாம். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்போ வருமான வரம்போ எதுவும் இல்லை.

பிஎஸ்பிடி கணக்கை தொடங்க ஆரம்ப டெபாசிட் எதுவும் தேவையில்லை. அந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கும் அவசியமும் இல்லை. வாடிக்கையாளரின் கோரிக்கையின் பேரில் வழக்கமான சேமிப்புக் கணக்கையும் பிஎஸ்பிடி கணக்காக மாற்றலாம். பிஎஸ்பிடி கணக்குதாரர்களுக்கு ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

பிஎஸ்பிடி கணக்குகளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் வரம்பின்றி பணம் செலுத்தலாம்.பிஎஸ்பிடி கணக்குதாரர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நான்கு முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதில் ஏடிஎம்-ல் பணம் எடுப்பது, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட்/கிளியரிங்/இன்டர்நெட் டெபிட்/நிலையான ஆணை/இஎம்ஐ போன்றவை அடங்கும். ஆனால்பிஎஸ்பிடி கணக்குதாரர்கள் அதே வங்கியில் வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருக்க முடியாது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *