விகடனுடைய தனிச்சிறப்பு அவர்களின் கார்ட்டூன் தான். உங்களுடைய கார்ட்டூனால் ஒரு காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும்.
சமீபத்தில் கூட மத்திய அரசு குறித்து நீங்கள் வரைந்த கார்ட்டூனை உதாரணமாக சொல்லலாம்.
இந்த கம்பெனி சார்ந்து இதை வாங்குங்கள் என்றால் அவர் விளம்பரதாரர் ஆகிவிடுவார்.
ஆனால், தரத்தை பொறுத்து எதை வாங்கலாம்… கூடாது என மக்கள் மொழியில் சொல்வதால்தான் ரெஜினுக்கு இந்த விருது.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மா இருந்த போது, என்னை சென்னை மேயர் ஆக்கப் போவதாக கூறினார். உடனே என்னுடைய மகன், மேயரான பிறகு புதிய கார் வாங்க வேண்டாம்.
அதற்கு முன்பாகவே வாங்கிவிடுவோம் என Ford Endeavor வாங்கிக் கொடுத்தார். அதேமாதிரி இப்போது ஆயிரம் விளக்கில் போட்டியிடும் போதும், ‘அப்பா நீங்கள் ஆயிரம் விளக்கில் வென்றுவிடுவீர்கள்.
ஜெயித்த பிறகு கார் வாங்கினால் தவறாக பேசிவிடுவார்கள். அதனால் இப்போதே வாங்கிவிடலாம்’ என ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். எனக்கு பெயர் ஞாபகம் வரவில்லை. காரை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளின் சாய்ஸ்தான்.
ஆனால், எனக்கு பழைய அம்பாசிடர் கார்தான் பிடிக்கும்” என்றார்.