உண்மையிலேயே நான் திரைப்படங்களில் நடிக்க வந்த நோக்கமே தளபதி விஜய்யுடன் ஒரே ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசையினால்தான். அது என்னுடைய நீண்ட நாள் கனவாகவும் இருந்தது.
திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது; அனைவரும் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். முக்கியமாகப் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தித் திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது.
‘சரி, அடுத்து விஜய் சார் நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் முயற்சி செய்து நடிக்கலாம்’ என்று நினைக்கக்கூட முடியாது. ஏனெனில், இதுதான் அவருடைய கடைசித் திரைப்படம்!
‘நம்முடைய காட்சிகளும் வரும், தளபதியோடு சேர்ந்து நாம் நடித்ததைத் திரையில் பார்க்கப் போகிறோம்’ என்ற மிகுந்த மகிழ்ச்சியோடுதான் திரையரங்கிற்குச் சென்றேன்.
ஆனால், அந்தக் காட்சிகள் நீக்கப்படும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் என்னை நினைத்து நான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன்” எனப் பேசியுள்ளார்.