விமான எரிபொருள் வரி குறைப்பு: பயணிகளுக்குப் பயன் என்ன? கனிமொழி கேள்வி|Tax Cut for Airlines, But Why Are Airfares Still So High? Kanimozhi Asks

Spread the love

கடந்த மாதம் தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (VAT) சென்னை விமான நிலையத்தில் 29%-ல் இருந்து 16%-ஆகவும், தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களில் வெறும் 1%-ஆகவும் குறைக்கப்பட்டது.

வரி குறைக்கப்பட்ட போதிலும், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில் விமானக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

இதனால் இந்த வரிக் குறைப்பு யாருக்குப் பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

“தமிழ்நாட்டின் விமான எரிபொருள் வரி குறைப்பால் யார் பயன்பெறுகிறார்கள்?

விமானம்

விமானம்
கோப்புப்படம்

விமானப் பயணத்தை மேலும் சாமானியர்களுக்கும் எட்டக்கூடியதாக மாற்றும் நோக்கில், சென்னை விமான நிலையத்தில் ATF மீதான VAT-ஐ 29%-லிருந்து 16%-ஆகவும், பிற விமான நிலையங்களில் 1%-ஆகவும் தமிழக வெற்றிக் கழக (TVK) அரசு குறைத்துள்ளது.

இருப்பினும் பண்டிகைக் காலத்தில் வழக்கமாக ₹4,000–₹6,000 ஆக இருந்த விமானக் கட்டணங்கள் ₹14,000–₹15,000 வரையிலும், சில வழித்தடங்களில் ₹18,000 வரையிலும் உயர்ந்துள்ளன.

1. எரிபொருள் வரி குறைப்பால் கிடைக்கும் சேமிப்பை விமானக் கட்டணங்களைக் குறைத்து பயணிகளுக்கு வழங்குவதாக விமான நிறுவனங்கள் ஏதேனும் உறுதி அளித்துள்ளனவா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *