நானும் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளுடன் உறுதியாக நிற்பேன். விவசாயத் தலைவர்கள் அளித்த ஆதரவையும் ஏற்றுக்கொண்டேன். பா.ஜ.க-வில் இணைய வேண்டும் என எனக்கு அழைப்பு வந்தது. அது ஒருகட்டத்தில் மிரட்டல்களாக மாறின.
ஆனால், வாய்ப்பு கிடைத்தாலும் நான் பா.ஜ.க-வில் இணையமாட்டேன். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எனது தலைமுறை மக்களை அச்சுறுத்துகின்றனர்.
வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகளின் கவலைகள் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயல்கிறது.
டெல்லி காவலர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும் அல்லது தங்கள் காக்கி நிற நீண்ட கால்சட்டையைக் கழற்றிவிட்டு, காக்கி நிற அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு பா.ஜ.க தலைமையகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பலாம்.
போராட்டத்திற்கு முன்னதாகவே கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டதை நான் பார்த்தேன். ஆனால், மாணவர்கள் மீது பழிபோட காவல்துறை திட்டமிட்டிருந்தது. இப்படித்தான் இந்த முழு நடவடிக்கையும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை.” என்றார்.