மிசா காலத்தில் திருட்டு, கொள்ளை, பெண்களை தவறாக பேசியவர்களையெல்லாம் கைது செய்தார்கள். அதையெல்லாம் மிசா கைது என எடுக்க முடியாது. இந்திரா காந்தியைப் பற்றி ஸ்டாலின் அவதூறாக பேசியிருந்தார். பெண்களை தவறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்கிற குறிப்புகள் இருக்கிறது.’ என்றார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கோவி.செழியன், ‘அமலாக்கத்துறை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதை முதல்வர் எப்படி பேசலாம்?
சர்க்காரியா கமிஷனில் யாரும் குற்றவாளி என தீர்ப்பு கொடுக்கப்படவில்லை . அதை வைத்தே திமுகவை விமர்சிக்க காரணம் என்ன?
இறந்து போன முரசொலி மாறனை பற்றி முதல்வர் ஏன் பேச வேண்டும்?’ என்றார்.
இந்நிலையில், முதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் உறுதியாக கூறிவிட்டார்.