ஸ்ரீசாந்த்  VS ஹர்பஜன் சிங் மோதல் உச்சக்கட்டம் : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி  – Kumudam

Spread the love

ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங் அண்மையில் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஸ்ரீசாந்திடம் அவரும் ஹர்பஜனும் பாக்ஸிங் உடையில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் காட்டப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு பேசிய ஹர்பஜன் சிங், ” இதே காட்சியை நிஜத்தில் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் பாக்ஸிங் ரிங்குக்குள் வர உங்களுக்கு துணிச்சல் உள்ளதா? ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உங்களால் வர முடியுமா?

ஹர்பஜனிடம் தான் நான் இதைக் கேட்கிறேன். அதே கையுறைகளை அணிந்து என்னுடன் மோத உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? நான் உங்களை அழைக்கிறேன். சுயமரியாதை இருந்தால், விளம்பரங்கள் செய்வதைத் தவிர்த்துவிட்டு களத்திற்கு வாருங்கள். உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்று சவால் விடுத்திருக்கிறார்.

இந்த சவால் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். “யாரோ மிகச் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்… வீணாகப் பேசுபவர்களைப் பேசவிடுங்கள், எப்போதும் வெற்றுப் பாத்திரங்கள்தான் அதிக சத்தம் போடும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீசாந்தை மறைமுகமாக வைத்துத்தான் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *