இன்றைக்கு இந்தியாவின் பல நட்சத்திர ஹோட்டல்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக கேக் மிக்ஸிங் செரெமோனி நடத்தப்படுகிறது.
ஏன் கிறிஸ்துமஸுக்கு முன்பே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்?
இதுதான் இந்த நிகழ்ச்சியின் மிக முக்கியமான அம்சம். பொதுவாக கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கு முன்பாகவே உலர் பழங்களைத் தயாரித்து ஊறவைத்து வைப்பார்கள்.
இதற்குக் காரணம் என்னவென்றால்:
1. சுவையை அதிகரிக்க:
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவை ஒன்றாகக் கலக்கப்படுவதால் கேக்கிற்குத் தனித்துவமான சுவை கிடைக்கிறது.
2. நறுமணத்தை உருவாக்க:
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்கள் கேக்கிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகின்றன.
3. ஈரப்பதத்தைப் பராமரிக்க:
பழங்களைச் சரியான முறையில் ஊறவைப்பது கேக்கின் ஈரப்பதம் மற்றும் சுவைக்கு உதவுகிறது.
4. பாரம்பரியத்தைப் பாதுகாக்க:
பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் உணவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதே இதன் மற்றொரு நோக்கம்.
கேக் மிக்ஸிங் செரெமோனி எப்படி நடைபெறும்?
நம்மிடம் பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கூறியதாவது, நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி பின்வரும் முறையில் பின்பற்றப்படுகிறது. முதலில் நாங்கள் (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்),
ஹோட்டல் சமையல் கலைஞர்கள் ஒரு பெரிய மேஜையில் உலர் பழங்கள், நட்ஸ், மசாலாப் பொருட்கள் மற்றும் ரம் , பிராண்டி , வைன் போன்ற மதுபானங்களும் தயார் செய்து வைத்துக் கொள்வோம்.
அடுத்தாக சமையல் கலைஞர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் கேக் மிக்ஸிங் பாரம்பரியம் குறித்து வந்த விருந்தினர்களிடம் விளக்கி கூறுவார்கள். பின்னர் கேக் மிக்ஸிங் தொடக்கமாக பெரிய செவ்வக வடிவிலான மேசையில் பல்வேறு உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றால் அதில் நிரப்பி வைத்திருப்போம். சமையல் கலைஞர்கள் அதில் மசாலா பொருட்கள் சேர்ப்பார்கள்.