Sports
oi-Yogeshwaran Moorthi
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை ஸ்பெயின் அணி வென்றாலும், அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் அணியின் 11 முயற்சிகளை எலிமியானோ மார்ட்டினஸ் அசால்ட்டாக தடுத்து நிறுத்தினார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால் டிஃபெண்டிங் சாம்பியனான அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இதனால் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார்.

அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவருமே சோகமாக இருந்தனர். இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணியும் சொதப்பலோ சொதப்பலாக விளையாடியது. ஆனால் ஸ்பெயின் அணியின் அத்தனை வீரர்களுக்கும் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் தனியாளாக நின்று பதில் அளித்தார்.
முதல் பாதியில் ஸ்பெயின் அணி பெரிதாக கோல் அடிக்க தீவிரம் காட்டவில்லை. ஆனால் 2ஆம் பாதியில் ஸ்பெயின் அணி வீரர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் மேல் அட்டாக்கை செய்து கொண்டே இருந்தனர். அவர்களை அர்ஜென்டினா வீரர்களால் கொஞ்சம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் எமிலியானோ மார்ட்டினஸ் மட்டும், என்னை தாண்டி முடிந்தால் கோல் அடிங்கடா பார்க்கலாம் என்று அரண் போல் நின்றார்.
கிட்டத்தட்ட 11 கோல்களை எலிமியானோ மார்ட்டினஸ் தடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கிராஸ் பாஸ், ஹெட்டர், ஃபீரி கிக் வாய்ப்பில் யமால் அடித்த தரமான ஷாட் என்று அத்தனையையும் எலிமியானோ மார்ட்டினஸ் தடுத்தார். ஒருவேளை எமிலியானோ மார்ட்டினஸ் மட்டும் இல்லையென்றால், அர்ஜென்டினா அணி கொடூரமான தோல்வியை சந்தித்திருக்கும்.
ஸ்பெயின் அணியின் 11 வீரர்களும் சேர்ந்து எமிலியானோ மார்ட்டினஸை வீழ்த்தினர் என்றே சொல்லலாம். இதனால் அர்ஜென்டினாவில் எமிலியானோ மார்ட்டினஸ்க்கு நியாயமாக சிலை வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒருவேளை ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றிருந்தால், அர்ஜென்டினா அணியை தனியாளாக எமிலியானோ மார்ட்டினஸ் வெல்ல வைத்திருந்திருப்பார்.