’10 விநாடிகளில் டிரோன்களை வீழ்த்தும் துப்பாக்கிகள்!’ – டெண்டர் கோரிய காவல்துறை! |“Guns That Can Shoot Down Drones in 10 Seconds!” – Police Float Tender

Spread the love

இதைத் தொடர்ந்தே விஐபிக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஆன்டி டிரோன் துப்பாக்கிகளை வாங்க உளவுத்துறையின் SBCID பிரிவு திட்டமிட்டிருக்கிறது. 1.52 கோடி ரூபாய் செலவில் டிரோன்களைக் கண்டறியும் திறனோடு கூடிய 6 துப்பாக்கிகளை வாங்க டெண்டரும் கோரியிருக்கின்றனர்.

விஐபிக்களின் வாகனத்தைச் சுற்றி 3 கி.மீ சுற்று வட்டாரத்தில் பறக்கும் ட்ரோன்களை இந்தத் துப்பாக்கிகளால் கண்டறிய முடியும். மேலும், 1 கி.மீ சுற்று வட்டத்துக்குள் வரும் ட்ரோன்களைத் தாக்கி அவற்றுக்கு வரும் சிக்னல்களைத் தடுத்து செயலிழக்கவும் வைக்க முடியும்.

ஒட்டுமொத்த செயல்பாட்டையும் 10 விநாடிகளுக்குள் இந்தத் துப்பாக்கிகளால் செய்து முடிக்க முடியும். இந்தத் துப்பாக்கிகளை குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்றோரின் சுற்றுப்பயணங்களின்போது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதன்மூலம் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்தில் ட்ரோன் தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *