2026 பட்டதாரிகளுக்கு சிறப்பு உதவித்தொகையை அறிவித்த வெராண்டா பையர்! | veranda-phire-announces-special-scholarship-for-2026-graduates

Spread the love

வெராண்டா பையர், முன்னணி BFSI நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 மார்ச் மாதம் வரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதில் Equitas Small Finance Bank, City Union Bank, HDB Financial Services, Jana Small Finance Bank, RBL Bank, Axis Bank உள்ளிட்ட பல முன்னணி நிதி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முயற்சி குறித்து வெராண்டா பையர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவின் மேனன் கூறுகையில், “திறமை இருந்தும் பொருளாதாரக் காரணங்களால் தொழில்முகப் பயிற்சிகளைப் பெற முடியாமல் பல பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கான அந்தத் தடையை நீக்குவதற்காகவே இந்த உதவித்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். உயர்தர தொழில்துறைப் பயிற்சியுடன், அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், BFSI துறையில் வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்துவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்”

வெராண்டா பையர்

வெராண்டா பையர்

இந்த சிறப்பு உதவித்தொகை சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தகுதியான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள், தகுதிகள் மற்றும் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு வெராண்டா பையர்-ன் அதிகாரப்பூர்வ தளங்கள் அல்லது சேர்க்கைப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.

வெராண்டா லெர்னிங்

2018 ஆம் ஆண்டு கல்பாத்தி AGS குழுமத்தால் தொடங்கப்பட்ட வெராண்டா லெர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட், இன்று இந்தியாவின் முன்னணி பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி, போட்டித் தேர்வு பயிற்சி, வெளிநாட்டு உயர்கல்வி மற்றும் மென்பொருள் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பம், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவம் மூலம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வெராண்டா தொடர்ந்து பங்களித்து வருகிறது.

மேலும் தகவல்களுக்கு, www.verandalearning.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *