7 நாள் கெடு: காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்த மெட்டா அலுவலகத்தில் தாக்குதல்!

Spread the love

இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் உதய் பானு சிப் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய பொறுப்பாளர் மணீஷ் சர்மா ஆகியோரின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசேஜ்சர் போன்ற சமூக வலைத்தள கணக்குகளை கையாள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தின் அலுவலகங்கள் மீது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஐதராபாத்தில் உள்ள மெட்டா அலுவலகத்தின் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜக்கிடி சிவசரண் ரெட்டி தலைமையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஊடக தளங்களில் அரசியல் தலையீட்டை கண்டித்தும், சில பதிவுகளை வெளியிடக் கோரியும், மெட்டா மற்றும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மெட்டா அலுவலக வளாகத்தில் இருந்த பூங்செடிகளை எடுத்து உடைத்தனர். மேலும் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோஷமிட்டனர். இது குறித்து

இளைஞர் காங்கிரஸ், தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கட்டுப்படுத்தப்பட்ட கணக்குகள் மற்றும் இடுகைகளை 7 நாட்களுக்குள் மீண்டும் வெளியிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் மெட்டாவிற்கு 4 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் எத்தனை இந்தியக் கணக்குகள் அரசு உத்தரவின் பேரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன, எத்தனை தடுக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும். ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளை தானாக தடுப்பதை விளக்கவேண்டும். எதிர்ப்புக் குரல்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் படைப்பாளிகள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுப்பாடுகளையும் நீக்கவேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டங்கள் நடத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் போராட்டம்

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிராக மும்பை இளைஞர் காங்கிரஸும் மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் மெட்டா அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.

மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீனத் ஷப்ரின் தலைமையில் இப் போராட்டம் நடத்தப்பட்டது, அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் போஸ்டரையும் எரித்தனர்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில்,”:வெளிநாட்டு

“வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் வணிகத்தை நடத்த வேண்டும், அரசியலில் ஈடுபடக்கூடாது. அனைவரையும் சமமாக நடத்துவது ஒரு நல்ல, அனைவரையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் அடையாளம். அரசாங்கமும், வெளிநாட்டு நிறுவனங்களின் வணிகங்களை அவர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுத்து அரசியல் செய்யக்கூடாது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *