A Wife Is Not a Domestic Servant; Refusing to Cook Does Not Constitute Cruelty: Bombay High Court-மனைவி ஒன்றும் வீட்டு வேலைக்காரி கிடையாது, சமைக்காமல் இருப்பது கொடூரம் ஆகாது: மும்பை உயர்நீதிமன்றம்

Spread the love

மும்பையை சேர்ந்த கணக்கு தனிக்கையாளர் தனது மனைவி வீட்டு வேலைகளை செய்ய மறுப்பதாக கூறி குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். அதோடு அப்பெண்ணிற்கு பராமரிப்பு செலவுக்கான தொகையும் கொடுக்க உத்தரவிடமுடியாது என்று குடும்ப நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனது மனைவி கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிக்கும் வகுப்பு நடத்துவதாக கணக்கு தனிக்கையாளர் தரப்பில் தெரிவித்த வாதத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டது.

அதோடு திருமணமான சில மாதங்களில் வீட்டை விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பு 2010ம் ஆண்டு கோர்டில் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால மனைவி, குடும்ப நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பாரதி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தனது மனைவி வீட்டில் சமையல் போன்ற எந்த வீட்டு வேலையும் செய்யாமல் திருமணமான சில மாதங்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்று கணக்கு தனிக்கையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “‘மனைவி சமையல், சுத்தம் செய்தல் போன்ற வேலைகளைச் செய்யத் தவறினால் அது தானாகக் கொடுமையாகிவிடாது, திருமணம் என்பது சமமானவர்களின் கூட்டு, சேவை ஒப்பந்தம் அல்ல, மனைவிகள் வீட்டு வேலைக்கார பெண்ணாக கருதப்படுவதில்லை.

மனைவி தினசரி வேலைகளைச் செய்ய மறுப்பது மனக் கொடுமையாகாது” என்று தெரிவித்த நீதிபதிகள், பராமரிப்பு தொகை மறுத்த உத்தரவையும் ரத்து செய்தனர். மனைவி நடத்தும்’கலை மற்றும் கைவினை’ வகுப்பில் நிலையான வருமானம் வர வாய்ப்பு இல்லை என்றும் அதேசமயம், கணவர் கணக்கு தனிக்கையாளர் என்பதால், அவரைப் பராமரிப்பதற்கான தொழில்முறைத் தகுதியையும் வருமானத் திறனையும் கொண்டுள்ளார் என்று தெரிவித்ததுடன், மனைவிக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சமும், அவரது குடியிருப்புக்காக மாதம் கூடுதலாக ரூ.10,000-ம் பெற உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *